என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 13 செப்டம்பர், 2012

என் விகடனில் "நம் வலைப்பதிவர் சந்திப்பு "


   மிகப் பெரிய பதிவர் திருவிழாவை நடத்தி அதன் பெருமையை நம் வலைப் பதிவுகளில் பேசி வந்தோம். இன்னும் அந்த வரலாற்று பதிவர் சந்திப்பு நிகழ்வு மனதை விட்டு அகலாத நிலையில் இன்னுமொரு இன்ப அதிர்ச்சி.
   நமது 26.08.2012 அன்று நடைபெற்ற வலைப்பதிவர் திருவிழா ஆனந்த விகடனின் காதுகளை எட்டியுள்ளது. 
  ஆம்!  நமது தமிழ் பதிவர் சந்திப்பு பற்றிய செய்தி ஆனந்த விகடன் என் விகடனில் வெளியாகி உள்ளது. நிகழ்வு பற்றிய செய்திகள் விளக்கமாக படங்களுடன் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் இணையத்தில் மட்டுமே காண முடியும் என்று நினைக்கிறேன். அதனால் இன்னும் பதிவர்கள் பலருக்கு எட்டவில்லை என்று கருதுகிறேன். பதிவர்கள் குழுமம் ஈட்ட இருக்கும் வெற்றிகளுக்கு இது முதற் படி என்று கருதுகிறேன். இந்த பதிவர் சந்திப்பு சென்னையில் மிகப் பிரமாதமாக நடைபெறவேண்டும் என்ற விதையை விதைத்த புலவர் ராமானுசம்  அய்யா அவர்களுக்கும் உடனிருந்து உழைத்த அத்துணை நண்பர்களுக்கும் பங்கேற்ற மூத்த, இளைய பதிவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி.

இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் உண்டு. நமது அஞ்சாசிங்கம் செல்வின் இந்த வார வலையோசையில் இடம் பெற்றிருக்கிறார்.அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்  

இதோ என் விகடனில் வெளியான கட்டுரையின் "ஸ்னாப் ஷாட்கள்"


இதோ வெளியான பக்கத்திற்கான இணைப்பு
என் விகடனில் பதிவர்கள் சங்கமம்

கவனிக்க: நண்பர் ஒருவரின் பின்னூட்டம்

                
**********************************

பதிவர் சங்கமத்தில் வாசிக்கப் பட்ட என்னுடைய கவிதை 



29 கருத்துகள்:

  1. மகிழ்ச்சி நன்றி கசாலி ஏற்கனவே இதை பகிர்ந்திருந்தார்

    பதிலளிநீக்கு
  2. எங்கோ படித்தது போல் தெரிகிறதே என்று யோசித்துக்கொண்ட படித்து வந்தேன், யாருடைய வலையில் என்று மோகன் ஜீ-யின் கருத்துரையை பார்த்ததும் அறிந்தேன்!

    மீண்டும் ஒரு முறை வாசித்து மகிழும் வாய்ப்பை தந்த முரளி சாருக்கு நன்றி! :)

    பதிலளிநீக்கு
  3. நேரில் கண்டு மகிழ்ந்த சந்திப்பை என் விகடனில்
    காண்கையில் மனம் குளிர்ந்து போனது...

    பதிலளிநீக்கு
  4. ஆகா தமிழ் மணமா அல்லது சாக்கடை மணமா!!! திரும்பிய திசை எல்லாம் கோப்பி பேஸ்ட் பதிவுகள். தமிழ்மணம் அண்ணாக்கள் சொல்வார்கள் நாங்கள்தான் தமிழில் பெரிய லாடு லபக்குதாஸ்,

    இன்லி, தமிழ்வெளி, tamil10, ஐயாமார்கள் அமைதியா ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருகிறார்கள்.

    என்பா இஸ்கு உங்களிடம் பதிவிடும் பதிபவர்கள் நடத்தும் குடிமி சண்டை தெரியாதா? இந்த டுபுக்குகள் சொல்வார்கள் கோப்பி பேஸ்ட் பண்ணி எழுதினால் உடனே நீக்கி விடுவோம்,

    தமிழ் மணத்தில் வெளிவரும் ஒரு சில பதிவுகள் தவிர எல்லோரும் காப்பி தான். எல்லா பதிபவர்களும் ஏதோ நிருபர்கள் வைத்து செய்தி போடுவது போல். இது மட்டுமல்லாது பதிவை வெளியிடும்போதே சொல்வார்கள் தனிப்பட்ட தாக்குதல், மத சம்மந்தமாக தாக்குதல்கள் கூடாது என்று.

    ஆனால் அங்கே மதங்களை இழிவுபடுத்தி எழுதப்படும் விசயங்களும், தமிழர்களுக்குள்ளே சண்டையை உண்டாக்கும் விடயங்களுமே அதிகம். இந்த நாற்றம் பிடித்த திரட்டியில் எழுத நீயா நானா என்று போட்டி வேறு.

    பதிலளிநீக்கு
  5. 'என் விகடனில்' படித்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது...

    பதிலளிநீக்கு
  6. மனமகிழ்வுடன் நிகழ்ந்த பதிவர் திருவிழாவை என் விகடனில் பார்க்கும் போது இன்னும மகிழ்ச்சி. பகிர்ந்த உங்களுக்கு நன்றி முரளி.

    பதிலளிநீக்கு
  7. தமிழ் மணத்தில் இன்றைய மதவாத பதிவுகள்!

    இன்றைய காப்பி அண்ட் பேஸ்ட் இணையதளங்கள்!

    தமிழ் நாத்தம் ஒரு அறிமுகம்!

    அன்புள்ள தமிழ் வாசக நெஞ்சங்களே நீங்கள் அறிந்த தகவல்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் கருத்துக்களை பதியவேண்டிய முகவ்ரி. tamilnaththam@gamil.com

    please visit: www.tamilnaththam.blogspot.com

    பதிலளிநீக்கு
  8. நான் இதுக்காகவே விகடன் வாங்கி படிச்சேன். பகிர்வுக்க்கு நன்றி

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துகள் முரளி.தூர இருக்கும் எனக்கும் எப்போதாவது இப்படியான சந்தர்ப்பம் கிடைக்குமா என் ஏங்க வைக்கிறது மனம் !

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துகள். ஆனால் சென்னையில் என் விகடன் வெளிவருகிறதா என்ன? இணையத்தில் மட்டுமே வருகிறதோ?

    பதிலளிநீக்கு
  11. முரளி அவர்களே, மகிழ்ச்சியூட்டும் உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.

    S பழனிச்சாமி

    பதிலளிநீக்கு
  12. அன்புடையீர்! வணக்கம்.
    சென்ற ஆண்டு சென்னையில், நங்கநல்லூரில் மூன்றாம் கோணம் வலைப்பதிவர் சார்பில் நடைபெற்ற வலைப்பதிவர்கள் சங்கமத்தில் தற்செயலாகச் சென்ற நான் தலைமை ஏற்று நடத்த வேண்டிய பொறுப்பு வழங்கப்பட்டது. சிறியதாக இருந்தாலும் சிறப்பாக நடைபெற்றது என்ற தகவலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  13. நான் பார்க்காமல் விட்டு விட்டேன்.பார்த்திருந்தால் இந்தப் பதிவை தவிர்த்திருப்பேன். நன்றி மோகன்குமார்!

    பதிலளிநீக்கு
  14. நன்றி வசு.உங்களைப்போல அனைத்துப் பதிவுகளும் சென்று படிக்க முடியவில்லை.தமிழ் மணத்திலும் கண்ணில் படவில்லை. அந்தநாள் பகிர்ந்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  15. மகேந்திரன் said...
    நேரில் கண்டு மகிழ்ந்த சந்திப்பை என் விகடனில்
    காண்கையில் மனம் குளிர்ந்து போனது...//
    நன்றி மகேந்திரன்.

    பதிலளிநீக்கு
  16. //வெங்கட் நாகராஜ் said...
    பாராட்டுகள்.//
    நன்றி நாகராஜ் சார்!

    பதிலளிநீக்கு
  17. திண்டுக்கல் தனபாலன் said...
    'என் விகடனில்' படித்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது...//
    நன்றி தனபாலன் சார்

    பதிலளிநீக்கு
  18. பால கணேஷ் said...
    மனமகிழ்வுடன் நிகழ்ந்த பதிவர் திருவிழாவை என் விகடனில் பார்க்கும் போது இன்னும மகிழ்ச்சி. பகிர்ந்த உங்களுக்கு நன்றி முரளி.//
    நன்றி கணேஷ் சார்!

    பதிலளிநீக்கு
  19. வெங்கட ஸ்ரீநிவாசன் said...
    பகிர்விற்கு நன்றிகள்.//
    நன்றி வேங்கட ஸ்ரீநிவாசன

    பதிலளிநீக்கு
  20. ராஜி said...\
    நான் இதுக்காகவே விகடன் வாங்கி படிச்சேன். பகிர்வுக்க்கு நன்றி//
    நன்றி ராஜி

    பதிலளிநீக்கு
  21. ஸ்ரீராம். said...
    வாழ்த்துகள். ஆனால் சென்னையில் என் விகடன் வெளிவருகிறதா என்ன? இணையத்தில் மட்டுமே வருகிறதோ?//நன்றி ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  22. rasippu said...
    முரளி அவர்களே, மகிழ்ச்சியூட்டும் உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.
    S பழனிச்சாமி//
    நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  23. //ARUNMOZHI DEVAN said...
    அன்புடையீர்! வணக்கம்.
    சென்ற ஆண்டு சென்னையில், நங்கநல்லூரில் மூன்றாம் கோணம் வலைப்பதிவர் சார்பில் நடைபெற்ற வலைப்பதிவர்கள் சங்கமத்தில் தற்செயலாகச் சென்ற நான் தலைமை ஏற்று நடத்த வேண்டிய பொறுப்பு வழங்கப்பட்டது. சிறியதாக இருந்தாலும் சிறப்பாக நடைபெற்றது என்ற தகவலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.//.
    அப்படியா வாழ்த்துக்கள் சார். இதில் நீங்களும் கலந்து கொண்டிருக்கலாமே. சந்திப்போம்.



    Read more: http://tnmurali.blogspot.com/2012/09/blog-post_13.html#ixzz26Y2Ctigx

    பதிலளிநீக்கு
  24. நல்ல பகிர்வு,,,,வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  25. தகவலிற்கு - இடுகைக்கு மிக்க நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895