உழவன் பசியால் வீழ்வதை மாற்றி
உணவை அளிக்கும் அவன்தொழில் போற்றி
செயற்கையின் சாயம் வெளுக்கும் முன்னர்
இயற்கை அதனை விளக்கும் முன்னர்
கற்றுத் தேர்ந்த கலைகளைக் கொண்டு
சுற்றுச் சூழலை சுத்தமாய் ஆக்கி,
தீவிர வாத வேர்களை அறுத்து
தீவிர மான முயற்சிகள் எடுத்து
மன ஏடுகளில் மதங்களை அழித்து
பதிவேடுகளிலும் சாதிகள் ஒழித்து
அடுத்த தலைமுறை வாழ்ந்திட நினைத்து
அனைத்து வளங்களும் சுரண்டுதல் தடுத்து
அரிய தலைமை தேடிப் பிடித்து
அரசியல் சாக்கடை தூய்மைப் படுத்து
தேசப் பற்றை கொஞ்சம் நீட்டி
உலகப் பற்றுடன் உயர் வழி காட்டும்
உயர்ந்த தலைவனை உண்மையாய் தேடு
உன்னத பணிசெய் ஓர்முனைப் போடு
ஓட்டை நோட்டாய் மாற்றிட வேண்டாம்
ஓட்டைப் படகில் பயணம் வேண்டாம்
மந்தை ஆடாய் இன்னுமா வாழ்வாய்?
சிந்தனை செய்வாய் சீர்பட செய்வாய்
உந்தன் கையில் வாக்குச் சீட்டு
ஊழல் செய்வோர்க் கதுவே வேட்டு
இலவசக் கவர்ச்சியில் வீழ்ந்துவிடாதே
வலையில் சிக்கி,பின் வருந்தி அழாதே
அரை வேக்காடாய் அரசியல் செய்யும்
கரைவேட் டிகளின் தன்மை அறிந்து
விழிப்பாய் இருந்து வீரத் துடனே
கழிசடை எல்லாம் கழித்துக் கட்டு
எழுதிய விதியை மாற்றிக் காட்டு
எழுச்சி கொண்டே போடுஉன் ஓட்டு
**********************************************************************************************
படித்துவிட்டீர்களா?
எம்.எல்.ஏ.ஆகிறாள் சரிதா-தேர்தல் ஸ்பெஷல்
உணவை அளிக்கும் அவன்தொழில் போற்றி
செயற்கையின் சாயம் வெளுக்கும் முன்னர்
இயற்கை அதனை விளக்கும் முன்னர்
கற்றுத் தேர்ந்த கலைகளைக் கொண்டு
சுற்றுச் சூழலை சுத்தமாய் ஆக்கி,
தீவிர வாத வேர்களை அறுத்து
தீவிர மான முயற்சிகள் எடுத்து
மன ஏடுகளில் மதங்களை அழித்து
பதிவேடுகளிலும் சாதிகள் ஒழித்து
அடுத்த தலைமுறை வாழ்ந்திட நினைத்து
அனைத்து வளங்களும் சுரண்டுதல் தடுத்து
அரிய தலைமை தேடிப் பிடித்து
அரசியல் சாக்கடை தூய்மைப் படுத்து
தேசப் பற்றை கொஞ்சம் நீட்டி
உலகப் பற்றுடன் உயர் வழி காட்டும்
உயர்ந்த தலைவனை உண்மையாய் தேடு
உன்னத பணிசெய் ஓர்முனைப் போடு
ஓட்டை நோட்டாய் மாற்றிட வேண்டாம்
ஓட்டைப் படகில் பயணம் வேண்டாம்
மந்தை ஆடாய் இன்னுமா வாழ்வாய்?
சிந்தனை செய்வாய் சீர்பட செய்வாய்
உந்தன் கையில் வாக்குச் சீட்டு
ஊழல் செய்வோர்க் கதுவே வேட்டு
இலவசக் கவர்ச்சியில் வீழ்ந்துவிடாதே
வலையில் சிக்கி,பின் வருந்தி அழாதே
அரை வேக்காடாய் அரசியல் செய்யும்
கரைவேட் டிகளின் தன்மை அறிந்து
விழிப்பாய் இருந்து வீரத் துடனே
கழிசடை எல்லாம் கழித்துக் கட்டு
எழுதிய விதியை மாற்றிக் காட்டு
எழுச்சி கொண்டே போடுஉன் ஓட்டு
**********************************************************************************************
படித்துவிட்டீர்களா?
எம்.எல்.ஏ.ஆகிறாள் சரிதா-தேர்தல் ஸ்பெஷல்
அருமை நண்பரே நல்வழி படுத்தும் நல்ல வரிகள் வாழ்த்துகள்
பதிலளிநீக்குத.ம.1
கண்டிப்பாகப் போடுவேன் ஓட்டு.
பதிலளிநீக்குகழிசடையை எல்லாம்
பதிலளிநீக்குகழித்துப் பார்த்தால்
யாரையும் காணோம்
அதனால் குறைந்தப்பட்ச செயல் திட்டம்
மாதிரி குறைந்தப் பட்சக் கழிசடைகளுக்குப்
போடலாம் என இருக்கிறோம்
நீக்குஹஹஹஹா
வோட்டுதானே கண்டிப்பாக போடுறேன் இந்தியாவில் எனக்கு வோட்டு இல்லை அதனால் தமிழ்மணத்தி ஒரு வோட்டு போட்டு செல்லுறேன்
பதிலளிநீக்குநான் சொல்ல வந்த கருத்தை ரமணி ஸார் ஏற்கெனவே சொல்லி இருக்கிறார்!
பதிலளிநீக்குயாரைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்வது சிரமமானதே. இருந்தால் என்ன?. எதையோ நினைத்துக் கொண்டு ஓட்டுச் சாவடிக்குப் போய் கன்ஃப்யூஸ் ஆகி ஏதோ ஒரு பட்டனை அமுக்கி வருவார்கள் நம் மக்கள்
பதிலளிநீக்குநல்ல பகிர்வு. எனக்கு தமிழகத்தில் ஓட்டு இல்லை....
பதிலளிநீக்குஅருமையான விழிப்புணர்வு கவிதை! பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குநூறு சதவீத ஒட்டுபதிவுக்காக ,தேர்தல் கமிஷன் உங்கள் கவிதையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் :)
பதிலளிநீக்குதிரு ரமணியின் கருத்துதான் என் கருத்தும். எல்லாமே ஓட்டைப் படகுகள் என்று ஆனபின் எதில் பயணம் செய்வது?
பதிலளிநீக்குநான் ஓட்டுப் போடப்போவதில்லை என்றாலும், தமிழக தேர்தல் காட்சிகளை கூர்மையாக கவனித்து வருகிறேன். திராவிடக் கட்சிகளைத் தவிர்த்து வேறு யாராவது ஆட்சி அமைத்து தமிழகத்தைக் காப்பாற்ற மாட்டார்களா என்று மனம் அடித்துக் கொள்ளுகிறது. புதிய கூட்டணிகளும் திராவிடக் கட்சிகளின் பிரதிபலிப்பாகவே இருக்கின்றன. யார் வந்து தமிழகத்தைக் காப்பாற்றப் போகிறார்கள்?
கவிதை அருமை...ஓட்டுப் போட்டு முடிவுகளும் வந்தாயிற்றே....
பதிலளிநீக்கு16D9124380
பதிலளிநீக்குtakipçi satın al
En Güvenilir Hisse Senedi Nereden Alınır
Tiktok Takipçi Gönderme
En Güvenilir Banka
Coin Kazanma
0A2FE90F72
பதிலளிநீக்குkiralık hacker
hacker arıyorum
belek
kadriye
serik