என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

விஜய் டிவி 7C எப்படி?


    இந்த வாரத்தில் கல்வி தொடர்பான இரண்டு தினங்கள் கொண்டாடப்பட்டன. ஒன்று ஆசிரியர் தினம் (05.09.2012). இன்னொன்று உலக  எழுத்தறிவு தினம்(08.09.2012) . இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதே. அதனால் மாணவர் ஆசிரியர் தொடர்பான ஒரு தொலைக்காட்சித்  தொடரை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  சமூக மாற்றத்தை  ஏற்படுத்தக் கூடிய சக்தி ஆசிரியர்களிடத்தில்தான் உள்ளது என்பதை ஆசிரியர்களும் சமூகமும் உணரவேண்டும்.இந்த நல்ல  விஷயங்களை  விஜய் தொலைக் காட்சியின் ஏழாம் வகுப்பு 'சி' பிரிவு தொடர் எடுத்துரைக்கிறது என்று நினக்கிறேன் 
    7-C சீரியலின் சில எபிசோடுகளை பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளி பரப்புவதில் விஜய் டிவி முன்னிலையில் உள்ளது. ஆபாசம், குடும்ப வன்முறை, போன்ற தொடர்களுக்கு மத்தியில் குழந்தைகளோடு பார்க்கக் கூடிய  தொடர் இது ஒன்றாகத்தான்  இருக்கும் என்று நினைக்கிறேன்.

   முதல் பகுதியிலிருந்து பார்க்கவில்லை என்றாலும் அவ்வப்போது பார்த்தவற்றை வைத்து இதன் கதையை உணர முடிகிறது.இதில் நடிக்கும் நடிகர்கள் ஒருவர் பெயர் கூட எனக்கு தெரியாது.

  கனவுகளுடனும் குறிக்கோளுடனும்  ஆசிரியர் வேலை தேடிவரும் ஸ்டாலினுக்கு(சீரியலில் அவர் பெயர் இதுதான். உண்மையில் பெயர் என்னவென்று  தெரியவில்லை)  அந்தப் பள்ளியில் தற்காலிக வேலை கிடைக்கிறது. அவரை  7C  வகுப்பு ஆசிரியராக  இருக்கும்படி அனுப்புகிறார்கள். வகுப்புக்குள் நுழைந்த அவருக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருகிறது. 7-Cமாணவர்கள் யாருக்கும் கீழ்ப்படியாதவர்களாகவும் நற்குணங்கள் இல்லாதவர்களாகவும்,ஆசிரியர் உட்பட அனைவரயும் கிண்டல் கேலி செய்பவர்களாகவும்,படிப்பதில் துளி கூட விருப்பம் இல்லாதவர்களாகவும், இருப்பது கண்டு திகைக்கிறார்.

        வேறு ஆசிரியர் எவரும்  அந்த மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க மறுத்து விட்டதால்தான் தனக்கு அந்த வேலை கிடைத்தது என்பதையும் அறிந்து கொள்கிறார் பள்ளியில் உள்ள மற்றவர்கள் ஸ்டாலின் மீது பரிதாபப் படுகிறார்கள் அல்லது நகைக்கிறார்கள்.

    ஆனால் ஸ்டாலின் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு மிகவும் மோசமாகக் கருதப்படும் ஏழு மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுடன் நெருங்கிப் பழகி கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தை ஏற்படுத்துகிறார். கடின உழைப்பின் மூலம் குறுகிய காலத்தில் மாணவர்கள் மனதில் இடம் பிடிக்கிறார்.

  தலைமை ஆசிரியர் அவர்மீது நம்பிக்கை வைக்கிறார்.  மற்ற ஆசிரியர்கள் அவர்மீது பொறாமை கொள்கிறார்கள்.பல்வேறு இடைஞ்சல்களையும் ஏற்படுத்துகிறார்கள். இப்படி போய்க் கொண்டிருக்கிறது கதை.

  வாட்டர் டேங்க்,பட்டாசு போன்ற பட்டப் பெயர்களுடன் மாணவர்கள் உலா வருவதும் அவர்கள் அடிக்கும் லூட்டிகளும்  ஒரு அரசு பள்ளியின் வகுப்பை நினைவு படுத்துகிறது. மாணவர்கள் மிக அற்புதமாக நடிக்கிறார்கள்.

  ஆசிரியர் ஸ்டாலினாக நடிப்பவர் எளிமையான ஒரு கிராமத்து ஆசிரியரை நினைவு  படுத்துகிறார். யதார்த்தமான நடிப்பு.

ஒரு காட்சி: ஆய்வுக்காக அப்பள்ளிக்கு மாவட்ட கல்வி அலுவலர் வர இருக்கிறார். அவர் மாணவர்கள் கற்றதை அறிய கேள்விகள் கேட்பார்.மாணவர்கள் சரியான பதிலை சொல்லாவிட்டால் பள்ளிக்கு கெட்ட பெயர் எண்பதுடன் , ஸ்டாலினின் வேலைக்கு  ஆபத்து வந்து விடும். வேறு யாரும் வகுப்பு எடுக்க மறுக்கும் சூழ் நிலையில் அவரே அனைத்துப் பாடங்களயும் எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அப்போது அவர் அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியையிடம் எல்லா பாடமும் நான் எடுத்துடுவேன். ஆனா இங்க்லீஷ் மட்டும் எனக்கு கொஞ்சம் கஷ்டம் அதை நீங்க எடுத்தா நல்லா  இருக்கும் என்று சொல்லும்போது நாமும் சேர்ந்து அவரது துயரத்தில் பங்கு கொள்ளலாம் போல இருக்கும். 

    ஆரம்பக் கல்வி கற்பிக்கும் ஒரு ஆசிரியர் மிகுந்த அறிவாளியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை மாணவர்களின் மனப்பாங்கை அறிந்து பாடம் சொல்லித் தருபவராகவும்,அவர்களுதிய மனதில்மாற்றத்தை ஏற்படுத்துபவராகவும் அவர்களுக்கு தன் நன்னடத்தை பேச்சு மூலம் முன்மாதிரியாக திகழ்பவரும்தான்  ஒரு சிறந்த ஆசிரியரின் பண்பாகக் கருதுகிறேன். ஏழ்மை, மற்றும் மோசமான குடும்பப்  பின்னணியில் இருந்து  பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு கல்வி கொடுப்பது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. ஆங்கிலப் பள்ளிகள் போல பெற்றோர்களைக் கூப்பிட்டு உன் பிள்ளை படிக்க வில்லை என்று சொல்ல முடியாது.(படிக்கவைக்க வேண்டிய அவர்கள் உன் பையன் ஏன் சரியா படிக்க மாட்டேங்கறான் என்று பெற்றோர்களிடமே கேட்பார்கள்.) சொன்னாலும் கண்டுகொள்ள மாட்டார்கள் இதை ஸ்டாலின் என்ற பாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு.

  தலைமை ஆசிரியர், பியூன் பிற ஆசிரியர்கள்  நடிப்பும் அருமை. டைமிங் காமடி கலாட்டாக்களுக்கும்   குறைவில்லை. 

   உங்களுக்கு எந்த ஆசிரியரை பிடிக்கும் என்று மாணவர்களிடம் கேட்கும்போது எனக்கு  ஸ்டாலின் சாரைத்தான் பிடிக்கும் என்று மாணவர்கள் சொல்கிறார்கள்.ஏன் என்று காரணம் கேட்கும்போது அவன் பக்கத்து மாணவனைக்  கேட்க அவன் தெரியல என்று சொல்லும்போது நெஞ்சம் நெகிழ்கிறது. தானாக ஒரு மரியாதை அவர்  மீது வந்து  விடுகிறது.

  ஸ்டாலின் சார் முதல் முதல்ல கிளாசுக்கு வந்தப்ப கருப்ப பேன்ட் கட்டம் போட்ட சட்ட போட்டிருந்தார் என்று மாணவிகள் பேசிக்கொள்வது படு யதார்த்தம்.

    அடுத்து வரும் பகுதிகளின் முன் பார்வைக் காட்சி ஒன்றில்  மாணவர்கள்  ஆசிரியர்தான் சேர்த்து ஒரு க்ரூப் போட்டோ எடுக்கின்றனர்.வழக்கமா இப்படியே எடுக்கிறாயே கொஞ்சம் வித்தியாசமா எடுப்பா  என்று போட்டோ எடுப்பவரிடம் சொல்ல. எப்படி சார்? என்று கேட்க உடனே ஸ்டாலின் மாணவர்களை பார்த்து அட்டேக்  என்று சொல்ல எல்லோரும் சேர்ந்து ஒ! என்று கூச்சலிட்டுக் கொண்டே ஆசிரியரை நெருங்க அப்படியே புகைப்படம் எடுக்கப் பட, நமக்கும் மகிழ்ச்சி ஏற்படுவது உண்மை.

   இப்படியும்  ஒரு சில ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.அனைத்து ஆசிரியர்களும் இவரைப் போல இருந்தால் எப்படி இருக்கும்? என்ற எண்ணம்  ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

      தமிழ் வழிப் பள்ளி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் சூழலை அழகான  தொடராக எடுத்த தைரியத்திற்காக விஜய் டிவி யைபாராட்டலாம். தொடரில் குறைகள் இருந்தாலும் அவற்றை தாராளமாக மறந்து  விடலாம்.
                   *********************************** 
இதைப் படித்துவிட்டீர்களா? 
                   *****************************************

46 கருத்துகள்:

 1. நான் பார்க்காத தொடர்
  தங்கள் விமர்சனம் பார்க்கத் தூண்டுகிறது
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. True sir i was also watched some time that serial . It is very good story

  பதிலளிநீக்கு
 3. True sir i was also watched some time that serial . It is very good story

  பதிலளிநீக்கு


 4. செய்தி தவிர வேறு எதையும் பார்ப்ப தில்லை!

  பதிலளிநீக்கு
 5. 7-C சீரியலின் சில எபிசோடுகளை பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளி பரப்புவதில் விஜய் டிவி முன்னிலையில் உள்ளது. ஆபாசம், குடும்ப வன்முறை, போன்ற தொடர்களுக்கு மத்தியில் குழந்தைகளோடு பார்க்கக் கூடிய தொடர் இது ஒன்றாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.// உண்மைதான் மிகசரியான உங்களின் கூற்று சரியானதே .

  பதிலளிநீக்கு
 6. நல்லதொரு தொடரை அறிமுகம் செய்து பார்க்கத்தூண்டியுள்ளீர்கள்! மின்சாரமும் கேபிளும் சரியாக இருந்தால் ஒருமுறை பார்க்கிறேன்! நன்றி!

  இன்று என் தளத்தில்
  ஏன் என்ற கேள்வியும்! அதிசயத் தகவல்களும்
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_9.html
  நூறாவது பாலோவரும்! கொன்றைவானத் தம்பிரானும்!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6325.html


  பதிலளிநீக்கு

 7. நான் தொடர்ந்து பார்க்கும் ஒரு சில சீரியல்களில் 7-சி யும் ஒன்று. ரசிக்கும்படி இருக்கிறது. சில சம்பவங்கள் சிறு வயதில் அடித்த லூட்டிகளை நினைவு படுத்துகின்றன. சேவை மனப் பான்மையுடன் வசதி இல்லாதவருக்குக் கல்வி கற்பித்தல் மிகவும் போற்றுதற்குரியது நம் அலை வரிசையில் ஒற்றுமை இருக்கிறதோ ?. .

  பதிலளிநீக்கு
 8. இந்த தொடர் நன்றாக இருக்கிறது என்று என் நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார்! இயன்றால் இந்த தொடரை பார்க்க முயற்சிக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 9. வழக்கம் போல் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரமணி சார்.

  பதிலளிநீக்கு
 10. அ.குரு said...
  True sir i was also watched some time that serial . It is very good story//
  Thank you for visiting my blog

  பதிலளிநீக்கு
 11. எனக்கும் இந்த நாடகம் பிடிக்கும். ஆனால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. ஆசிரியராக நடிப்பவர் கலைஞர் தொலைக்காட்சியில் பாரதிராஜாவின் தெற்கத்திப் பொண்ணு நாடகத்தில் நடித்தவர். பாரதிராஜாவின் உறவினர் என்பதாகக் கேள்விப்பட்டேன். அருமையாக நடிக்கிறார்.

  பதிலளிநீக்கு
 12. புலவர் சா இராமாநுசம் said...
  செய்தி தவிர வேறு எதையும் பார்ப்ப தில்லை//
  வருகைக்கு மிக்க நன்றி அய்யா!

  பதிலளிநீக்கு
 13. மாலதி said...
  7-C சீரியலின் சில எபிசோடுகளை பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளி பரப்புவதில் விஜய் டிவி முன்னிலையில் உள்ளது. ஆபாசம், குடும்ப வன்முறை, போன்ற தொடர்களுக்கு மத்தியில் குழந்தைகளோடு பார்க்கக் கூடிய தொடர் இது ஒன்றாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.// உண்மைதான் மிகசரியான உங்களின் கூற்று சரியானதே .//
  நன்றி மாலதி மேடம்.

  பதிலளிநீக்கு
 14. s suresh said...
  நல்லதொரு தொடரை அறிமுகம் செய்து பார்க்கத்தூண்டியுள்ளீர்கள்! மின்சாரமும் கேபிளும் சரியாக இருந்தால் ஒருமுறை பார்க்கிறேன்! நன்றி!
  இன்று என் தளத்தில்
  ஏன் என்ற கேள்வியும்! அதிசயத் தகவல்களும்//
  நன்றி சுரேஷ்

  பதிலளிநீக்கு
 15. //G.M Balasubramaniam said...
  நான் தொடர்ந்து பார்க்கும் ஒரு சில சீரியல்களில் 7-சி யும் ஒன்று. ரசிக்கும்படி இருக்கிறது. சில சம்பவங்கள் சிறு வயதில் அடித்த லூட்டிகளை நினைவு படுத்துகின்றன. சேவை மனப் பான்மையுடன் வசதி இல்லாதவருக்குக் கல்வி கற்பித்தல் மிகவும் போற்றுதற்குரியது நம் அலை வரிசையில் ஒற்றுமை இருக்கிறதோ ?. .//
  நன்றி அய்யா!தங்கள் வருகைமற்றும் கருத்தால் மகிழ்ச்சி அடைகிறேன்.

  பதிலளிநீக்கு
 16. //வரலாற்று சுவடுகள் said...
  இந்த தொடர் நன்றாக இருக்கிறது என்று என் நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார்! இயன்றால் இந்த தொடரை பார்க்க முயற்சிக்கிறேன்!//
  நன்றி வசு

  பதிலளிநீக்கு
 17. அன்பரே நீங்கள் குறிப்பிட்ட கடைசி பகுதி நாடகத்தில் இல்லை அது ஒரு போட்டிக்கான preview மற்றபடி அனைத்தும் உண்மை

  பதிலளிநீக்கு
 18. //Prem Kumar.s said...
  அன்பரே நீங்கள் குறிப்பிட்ட கடைசி பகுதி நாடகத்தில் இல்லை அது ஒரு போட்டிக்கான preview மற்றபடி அனைத்தும் உண்மை//
  தொடர் பகுதிக்கான முன் பார்வைக் காட்சி என்பதை குறிப்பிட்டிருகேகிறேன் நண்பரே!
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 19. பள்ளி பற்றிய தொடர் என்பதால் உங்களை கவர்ந்திருக்கும் என நினைக்கிறேன் நான் பார்ப்பதில்லை வரவே லேட் ஆகிடும்

  பதிலளிநீக்கு
 20. நானும் சில எபிசோட்கள் பார்த்திருக்கிறேன்.வித்தியாசமான தொடர்.

  பதிலளிநீக்கு
 21. பதிவு வாசித்தேன் நல்லது நடக்கட்டும். மீண்டும் சந்திப்போம் எழுத்து முலம்
  அன்புடன்
  வேதா இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 22. //குட்டன் said...
  நானும் சில எபிசோட்கள் பார்த்திருக்கிறேன்.வித்தியாசமான தொடர்.//

  நன்றி குட்டன்

  பதிலளிநீக்கு
 23. //kovaikkavi said...
  பதிவு வாசித்தேன் நல்லது நடக்கட்டும். மீண்டும் சந்திப்போம் எழுத்து முலம்
  அன்புடன்
  வேதா இலங்காதிலகம்.//

  நன்றி வேதா மேடம்

  பதிலளிநீக்கு
 24. //மோகன் குமார் said...
  பள்ளி பற்றிய தொடர் என்பதால் உங்களை கவர்ந்திருக்கும் என நினைக்கிறேன் நான் பார்ப்பதில்லை வரவே லேட் ஆகிடும்//
  நானும் பெரும்பாலும் இந்த சீரியல் முடியும் தருவாயில்தான் வருவேன்.

  பதிலளிநீக்கு
 25. இப்படியும் ஒரு சில ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.அனைத்து ஆசிரியர்களும் இவரைப் போல இருந்தால் எப்படி இருக்கும்? என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

  இப்படி நீங்கள் சொன்னதைப் படிக்கும் பொழுது எனக்கும் ஏக்கம் வருகிறது தான்.
  நல்ல பகிர்வு.
  நன்றி முரளீதரன் ஐயா.

  பதிலளிநீக்கு
 26. ஆசிரியர் தினத்தினை முன்னிட்டும், உலக எழுத்தறிவு தினத்தினை முன்னிட்டும்,அருமையான பதிவைப் பகிர்ந்து கொண்டமைக்கு, ஒரு ஆசிரியர் என்ற முறையில் நன்றியினையும், மகிழ்வினையும் தெரிவித்துக் கொள்கின்றேன்

  பதிலளிநீக்கு
 27. Very good serial, reminds me about my school days. please join the fan page for 7c stalin sir :)
  https://www.facebook.com/7cStalinSir?skip_nax_wizard=true#

  பதிலளிநீக்கு
 28. இந்தத் தொடரைப் பாக்க வச்சிடுவீங்கபோல இருக்கே !

  பதிலளிநீக்கு
 29. நானும் பல எபிசோட்கள் பார்த்தேன். சகோதரத்துவத்தையும், ஆண்,பெண் சமத்துவத்தையும் ஆசிரியர் உணர்த்தும் பகுதிகள் அருமை. எனக்கு இந்த மாதிரியான ஆசிரியர்கள் அமைந்தனர் என்பதை மகிழ்வுடன் பகிர்கிறேன். இன்னமும் அவர்களின் நினைவு நிழலாடுகிறது.வாய்ப்பு கிடைக்கும் சிலரை சந்திக்கவும் செய்கிறேன்.

  பதிலளிநீக்கு
 30. நல்ல நிகழ்ச்சிகளைப் பார்த்து, நல்லவைகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 31. //தொழிற்களம் குழு said...
  உங்கள் விமர்சனம் அருமை சகோ,,,//
  தொழிர்களம் குழுவினருக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 32. பொதுவாகவே சீரியல்கள் எதும் பார்ப்பதில்லை முரளி.... இது போல சில நல்ல சீரியல்களும் இருக்கலாம்....

  இன்று எனது பக்கத்தில் வெளியிட்ட பகிர்வு டாஷ்போர்டில் அப்டேட் ஆகவில்லை. முடிந்தபோது படியுங்கள்.

  நட்புடன்

  வெங்கட்.

  பதிலளிநீக்கு
 33. ஹேமா said...
  இந்தத் தொடரைப் பாக்க வச்சிடுவீங்கபோல இருக்கே !//
  பாக்கவேண்டிய சீரியால்தான் ஹேமா!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 34. வெங்கட் நாகராஜ் said...

  பொதுவாகவே சீரியல்கள் எதும் பார்ப்பதில்லை முரளி.... இது போல சில நல்ல சீரியல்களும் இருக்கலாம்....

  இன்று எனது பக்கத்தில் வெளியிட்ட பகிர்வு டாஷ்போர்டில் அப்டேட் ஆகவில்லை. முடிந்தபோது படியுங்கள்.
  நட்புடன்//
  நன்றி வெங்கட்!

  பதிலளிநீக்கு
 35. ezhil said...
  நானும் பல எபிசோட்கள் பார்த்தேன். சகோதரத்துவத்தையும், ஆண்,பெண் சமத்துவத்தையும் ஆசிரியர் உணர்த்தும் பகுதிகள் அருமை. எனக்கு இந்த மாதிரியான ஆசிரியர்கள் அமைந்தனர் என்பதை மகிழ்வுடன் பகிர்கிறேன். இன்னமும் அவர்களின் நினைவு நிழலாடுகிறது.வாய்ப்பு கிடைக்கும் சிலரை சந்திக்கவும் செய்கிறேன்.//
  நன்றி எழில் அது போல் அமைவது உங்கள் அதிர்ஷ்டம்தான்

  Read more: http://tnmurali.blogspot.com/2012/09/7c.html#ixzz264mstoor

  பதிலளிநீக்கு
 36. திண்டுக்கல் தனபாலன் said...
  நல்ல நிகழ்ச்சிகளைப் பார்த்து, நல்லவைகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...//
  மிக்க நன்றி தனபாலன் சார்!

  பதிலளிநீக்கு
 37. //தருமி said...
  ஆசிரியர்களும் மாணவர்களும் பார்க்கணும் ..//
  வருகைக்கும் கருத்க்கும் நன்றி தருமி .

  பதிலளிநீக்கு
 38. //AROUNA SELVAME said...
  இப்படியும் ஒரு சில ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.அனைத்து ஆசிரியர்களும் இவரைப் போல இருந்தால் எப்படி இருக்கும்? என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

  இப்படி நீங்கள் சொன்னதைப் படிக்கும் பொழுது எனக்கும் ஏக்கம் வருகிறது தான்.
  நல்ல பகிர்வு.
  நன்றி முரளீதரன் ஐயா.//

  நன்றி அருணா செல்வம்

  பதிலளிநீக்கு
 39. கரந்தை ஜெயக்குமார் said...

  ஆசிரியர் தினத்தினை முன்னிட்டும், உலக எழுத்தறிவு தினத்தினை முன்னிட்டும்,அருமையான பதிவைப் பகிர்ந்து கொண்டமைக்கு, ஒரு ஆசிரியர் என்ற முறையில் நன்றியினையும், மகிழ்வினையும் தெரிவித்துக் கொள்கின்றேன்//
  நன்றி ஜெயகுமார் சார்!

  பதிலளிநீக்கு
 40. மனதிற்கு பிடித்த ஒரு தொடர் பற்றிய விவாதம்
  மிக அருமை நண்பரே...

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895