என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 13 நவம்பர், 2012

A.R.ரகுமான்-வைரமுத்து-நெஞ்சுக்குள்ளே-கடல் பாடல் வரிகள் விமர்சனம்.


     அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
 மணிரத்தினத்தின் கடல் படத்தில் இடம் பெற்ற வைரத்துவின் நெஞ்சுக்குள்ளே பாடலை மயக்கும் இசையுடன் MTV யில் A.R.ரகுமான் இசைத்துக்  காட்டியது அனைவருக்கும் தெரிந்ததே. அதைப் பற்றிய விமர்சனங்கள் ஏற்கனவே படித்திருப்பீர்கள்.

ஏ.ஆர.ரகுமானின் இசையைப் பொருத்தவரை அவரது பாடல் வரிகள் எளிதில் புரியாவிட்டாலும் இசைக் கட்டமைப்பு மூலம் அனவைரையும் கவர்ந்து விடுவது அவரது சிறப்பு. அந்த வகையில்தான் இந்தப் பாடலும் அமைந்திருக்கிறது. அதைப் பற்றி நான் சொல்லப் போவதில்லை. பாடல் வரிகள் பற்றி பார்க்காலம்.

 இதோ அந்த வைரமுத்துவின் பாடல் வரிகள்

நெஞ்சுக்குள்ள
ஒம்ம  முடிஞ்சிருக்கேன்
இங்கே எத்திசையில்
எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

வெள்ள பார்வை வீசிவிட்டார் முன்னாடி
இத  தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி

வண்ண மணியாரம் வலதுகை கடியாரம்
ஆணை புலி எல்லாம் அடக்கும்அதிகாரம்

நீர் போன பின்னும்
நிழல் மட்டும் போகலையே போகலையே
நெஞ்சுக்குழியிலே வந்து விழுந்துருச்சி

அப்ப நிமிந்தவதான் அப்புறமா 
குனியலையே!குனியலையே!
கொடக் கம்பி போல 
மனம் குத்தி நிக்குதையா
                               (நெஞ்சுக்குள்ளே)

பட்சி உறங்கிடிச்சி
பால் தயிரா திரிஞ்சிடிச்சு
ஈச்சி மரத்து மேல
இல கூட தூங்கிடிச்சி

காசநோய்க் காரகளாம்
கண்ணுறங்கும்  வேளையிலே
ஆசநோய் வந்த மக
அர  நிமிஷம் தூங்கலையே
                   (நெஞ்சுக்குள்ளே!)

ஒரு வாய் எறங்க லியே
உள்நாக்கு நனையலையே
ஏழெட்டு  நாளா
எச்சில் விழுங்கலையே

ஏலே இலஞ்சிருக்கி
ஏதும் சொல்ல முடியலையே
ரப்பர் வளைக்கெல்லாம்
சத்தமிட வாயில்லையே!
                        (நெஞ்சுக்குள்ளே)

( சில  வரிகள்  காதில் தெளிவாக விழ வில்லை.நம்ம காது ரிப்பேரோ?)

  இசையின்றி இதைப் படிக்கும்போது ஒரு நாட்டுப்புறக் கவிதை படித்ததுபோல போல இருக்கிறது. இந்தப் படம் நெய்தல் நிலக் காதலை சொல்வது என்று படித்ததாக ஞாபகம். ஆனால் அது தொடர்பான வார்த்தைகள் எதுவும் காணப்படவில்லை.முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் தொடர்பு இல்லாதது போல் தோன்றுகிறது.வண்ண மணியாரம் வலது கை கடிகாரம் என்ற வரிகளில் வண்ண மணியாரம் பொருத்தமாக இல்லை. ஆண்கள் மணியாரம் அணிவார்களா! 
பட்சி உறங்கிடிச்சி! பால் தயிரா திரிஞ்சிடிச்சி இந்த வரிகளெல்லாம் இரவு நெடு நேரம்  ஆகி விட்டது என்ற பொருளில் எழுதப் பட்டுள்ளது. திரிஞ்சிடிச்சி என்பதற்கு பதிலாக மாறிடிச்சு என்று கூட இருக்கலாம். 

நிறைகள் இல்லையா? இருக்கிறது "கொடக் கம்பி போல மனம் குத்தி நிக்குதையா" கொடக் கம்பி ஒருபுதுமையான் உவமை. அதற்கு மேலாக எப்பொழுதும் இருமிக் கொண்டிருக்கும் காச நோயாளிகள் கூட தூங்கிவிட்டார்கள் ஆனால் ஆசை நோயில் அகப்பட்ட நான் தூங்கவில்லை என்று கூறுவது கவிஞரின் பிரத்யேக டச் அந்த வரிகளில் தெரிகிறது. ரப்பர்  வளைக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே! கவிஞர் அசத்தி விட்டார்.
பாடல் வரிகள் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம். என்றாலும் ரகுமானின் இசை  குறைகளை மறைத்துவிட்டது.பாடல் வரிகள் கிராமச் சாயலில் இருந்தாலும் பாடலின் இசையில் வெஸ்டர்ன் தாக்கம் அதிகமாக உள்ளது .

இதோ அந்தப் பாடல் 
பாடியவர்  சக்திஸ்ரீ கோபாலன்


************************************************************************************
இதைப் படிச்சாச்சா?
இது யாருடைய கண்ணீர்க் கதை?


25 கருத்துகள்:

  1. எங்கள் ஊர்ப்பக்கம் பால் கெட்டுப் போய்விட்டால் பால் திரிஞ்சு போச்சு என்றே சொல்வார்கள்... அதனால் அந்த வரிகளில் குறை சொல்வதற்கில்லை... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்கூல் பையன்.பால் கெட்டுப் போனால்தான் திரிஞ்சி போச்சு என்று சொல்வார்கள்.கெட்டுப் போவதற்கும் தயிராக மாறுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பது என்கருத்து இங்கு பால் தயிராக மாறும் அளவுக்கு நேரம் ஆகி விட்டது என்பதைத்தான் கவிஞர் சொல்ல விரும்பினார் என்று நான் நினைக்கிறேன்.ஓசை நயத்திற்காக போட்டிருக்கலாம். அல்லது திரிதல் என்பதற்கு மாறுதல் என்ற பொருளும் உண்டு.அப்படி நினைத்தும் போட்டிருக்கலாம்

      நீக்கு
    2. திரிந்து தயிராகுதல் என்ற வரிகள் சரியான வரிகள் தான். (//ஓசை நயத்திற்காக போட்டிருப்பாரோ?//சந்தத்துடன் சண்டையிடாத வார்த்தைகளில் தான் பாடலின் இனிமை இருக்கிறது).

      நீக்கு
  2. பாடல் குறித்தான உங்கள் விமர்சனம் அருமை. பால் திரிஞ்சி போச்சு என்பது பேச்சு வழக்குத்தான்....

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் கொடுத்த சுட்டி மூலம் பாடலையும் தரவிறக்கிக் கொண்டேன் சார் ... தீபாவளி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. படப் பாடலுக்கு அழகான விமர்சனம் கொடுத்திருக்கிறீர்கள.
    இப்பொழுது வரும் பாடல்களில் இசையைத் தவிர்த்து
    பாடலின் பொருளைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம்.
    ஆனால் நீங்கள் அழகாக விளக்கியவிதம் சினிமா பாடலில் இவ்வளவு
    இருக்கிறதா... என்றே வியக்க வைக்கிறது. நன்றி.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    என்னுடைய இதயம் நிறைந்த இனிய
    தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள் முரளிதரன் ஐயா.

    பதிலளிநீக்கு
  5. நல்ல வரிகள்... நன்றி...

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. பால் கெட்டால் (திரிவது) தயிர்; காய் கெட்டால் (கனிவது) பழம்.

    பதிலளிநீக்கு
  7. தீபாவளி வாழ்த்துக்கள்.
    பாடுபவர் யார்? இனிமையான குரல்.
    வரி புரியாததற்கு தமிழல்லாத உச்சரிப்பு இயல்பானதும் காரணம்.
    கவிதை சுமார் தான் :)

    பதிலளிநீக்கு
  8. பகிர்வுக்கு நன்றிகள்!

    கவிதையில் சில வரிகள் மட்டுமே ஈர்க்கின்றன!
    நெய்தல் நிலக் காதல் என்றால் மீன், கட்டுமரம், கடல் போன்ற கடல் சார்ந்தவையும் குறிப்பிடப்பட்டிருந்தால் நன்றாக இருக்குமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி எழுதக் கூடியவர்தான் வைரமுத்து.பாடல் சூழல் எப்படி அமைக்கப் பட்டிருக்கிறது என்று தெரியவில்லை

      நீக்கு
  9. பாடல் வரிகளும் விமரிசனமும் அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு

  10. அப்பாதுரை பாடல் முழுமையாகக் கேட்டது ஆச்சர்யமா இருக்கே!

    பதிலளிநீக்கு
  11. குறை நிறை சுட்டினீர் ! நன்றி முரளி!

    பதிலளிநீக்கு
  12. //வண்ண மணியாரம் பொருத்தமாக இல்லை. ஆண்கள் மணியாரம் அணிவார்களா! //
    எனக்கும் அப்படித்தான் படுகிறது...

    பதிலளிநீக்கு
  13. அழகான விமர்சனம் ஒன்றை கொடுத்திருக்கிறீர்கள் நண்பரே.....ஒரு வலைப் பூ பதிபவன் என்ற வகையில் எனது வாழ்த்துக்கள் உங்களுக்கு உரித்தாகட்டும்....அத்துடன் மணியாரம் என்பது அரசர் காலத்து ஆண்கள் அணிந்த் ஒன்று.... அத்துடன் இன்றும் கூட கிராமத்து பகுதிகளில் அதிகாரம் படைத்த மதிப்புக்கு உரியவர்கள் அணிவது ஒன்றும் வியப்பில்லை என்பது எனது கருத்து.....நண்பரே

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895