உலகத்தில் இலவசம் என்று எதுவும் இல்லை. பாதுகாப்பு, ரகசியம் என்றும் எதுவுமில்லை.
( இந்தப் பதிவே அதற்கு உதாரணம். நேற்று இரவு பதிவிட்டேன். தமிழ்மணத்தில் இணைக்கவில்லை. காலையில்தான் தமிழ் மணத்தில் இணைத்தேன். தமிழ் 10 இல் இணைக்க முற்பட்டேன். அங்கே இதே பதிவைக் கண்டேன். வேறு யாரோ இணைத்து விட்டார்கள் என்று நினைத்து அதற்கு ஓட்டும் போட்டேன். அப்புறம்தான் தெரிந்தது அது யாழ்மின்னல் என்ற வலைதளத்தில் என் அனுமதியின்றி வெளியிடப் பட்டிருக்கிறது. இரண்டு மூன்று நாட்கள் கழித்தாவது வெளியிட்டிருக்கலாம். http://www.yarlminnal.com/?p=48743 )
( இந்தப் பதிவே அதற்கு உதாரணம். நேற்று இரவு பதிவிட்டேன். தமிழ்மணத்தில் இணைக்கவில்லை. காலையில்தான் தமிழ் மணத்தில் இணைத்தேன். தமிழ் 10 இல் இணைக்க முற்பட்டேன். அங்கே இதே பதிவைக் கண்டேன். வேறு யாரோ இணைத்து விட்டார்கள் என்று நினைத்து அதற்கு ஓட்டும் போட்டேன். அப்புறம்தான் தெரிந்தது அது யாழ்மின்னல் என்ற வலைதளத்தில் என் அனுமதியின்றி வெளியிடப் பட்டிருக்கிறது. இரண்டு மூன்று நாட்கள் கழித்தாவது வெளியிட்டிருக்கலாம். http://www.yarlminnal.com/?p=48743 )
சமீபத்தில் பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். எட்வர்ட் ஸ்நோடன் என்பவரைப் பற்றி.உலகில் உள்ள அனைத்து நாடுகளை உளவு பார்ப்பது மட்டுமல்லது தனி நபர் தகவல்களையும் திரட்டுகிறது அமெரிக்கா என்ற உண்மையை ஆதாரங்களுடன் அம்பலப் படுத்தியவர்தான் இந்த ஸ்நோடன். . இவர் மீது தேசத் துரோகக் குற்றம் சாட்டி தேடிவருகிறது அமெரிக்கா. இவருக்கு அடைக்கலம் தரவேண்டாம் என்று உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளது அமேரிக்கா. கூகுள்,ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற இணையதளங்கள் தாங்கள் சேகரித்த தகவல்களை அமெரிக்காவிற்கு அளித்து வருகிறதாம்.
அரசாங்கங்கள் குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்காக என்று சொல்லி எங்களிடமிருந்து தகவல்கள் கோருகின்றன. ஆனால் அது முற்றிலும் உண்மையா என்பதை நாங்கள் கண்டறிய இயலாது என்று கூறுகிறது கூகுள்.
பல்வேறு தேடு பொறிகள் இருந்தாலும் கூகுள்தான் முடிசூடா மன்னனாகத் திகழ்கிறது. அவ்வப்போது புதிய தேடுபொறிகள் முளைப்பதும் சிறது சிறிது காலத்திற்குள் காணாமல் போவதும் சகஜமே! அப்படி புதிதாக உருவான தேடு பொறி "டக் டக் கோ" (DuckDuckGo)
இணையத்தில் யாருடைய தகவல்களை சேகரிக்கவோ, உளவு பார்க்கவோ மாட்டோம் என்ற முழக்கமிடுகிறது 'டக்டக் கோ'. இதனாலேயே இது சற்று பிரபலம் அடைந்துள்ளது. இதற்கும் மேலாக கூகிள். எவ்வாறு இணையப் பயனாளர்களின் விவரங்களை சேகரிக்கிறது, என்பதை தெளிவான பட விளக்கங்களோடு விவரிக்கிறது.. அதனால் எந்த விவரமும் சேகரிக்காத, விளம்பரங்கள் இல்லாத எங்கள் DuckDuckGo) தேடு பொறியை பயன் படுத்துங்கள் என்று கூறுகிறது
கூகுள் எப்படி தகவல் திரட்டுகிறது என்று பார்ப்போமா?
உதாரணத்திற்கு Google இல் herpes என்று டைப் செய்து தேடுவதாகக்
கொள்வோம்.
தேடுதலின்போது ஒரு லிங்கை கிளிக் செய்ய உங்கள் தகவல்கள் அந்ததளத்திற்கு உங்கள் தேடுதல் வார்த்தையோடு உங்கள் கணினி மற்றும் பிரவுசர் விவரங்களை கீழ்க் கண்டவாறு அனுப்பி வைக்கிறது.
இவ்விவரங்கள் மூலம் உங்களை எளிதாக கண்டறிந்து விடுகிறது.
இது போன்ற சில தளங்கள் விளம்பரங்களை உடையதாக இருக்கின்றன, இவை விளம்பரம் செய்வதோடு உங்களைப் பற்றிய புரொஃபைலையும் தயாரிக்கின்றன
இவ்வாறு சேகரிக்கப் படும் விவரங்கள் விற்கப்பட்டுவிடுகின்றன
சில சமயங்களில் தேடுவதற்காக பயன்படுத்தப்படும் வார்த்தைகளால் சிக்கல்கள் ஏற்படக்கூடும் ரகசிய குறியீடுகளாக சில வார்த்தைகளை சமூக விரோதிகள் பயன் படுத்த அதை வேறு காரணத்திற்காக நாம் தேட சேமிக்கப் பட்ட இந்த தகவலால் நாம் விசாரணைக்கு உட்படுத்தப் படலாம்.
இது போன்று பல சிக்கல்கள் எழ வாய்ப்பு உண்டு, எனவே உங்கள் சொந்த தகவல்களை சேமிக்காத, யாருக்கும் விற்காத பாதுகாப்பான எங்கள் தேடுபொறியான DuckDuckGo வை பயன்படுத்துங்கள் என்று கூறுகிறது.
கூகுள் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் டக்டக் கோ எந்த அளவு நம்பகத் தன்மை வாய்ந்தது என்பது போகப் போகத் தான் தெரியும் .
உலகத்தில் எதுவும் இலவசமில்லை. சொல்லும் அளவுக்கு பாதுகாப்பும் இல்லை என்பதே உண்மை.குறிப்பாக பெண்கள் அதிக கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம்.
*******************************************************************************
இந்த புதிய தேடுபொறியின் தேடுதல் எப்படி இருக்கிறது என்பதை பயன்படுத்தி விட்டு சொல்கிறேன்.
******************************************************************************
என் இரண்டு எச்சல் பற்றிய பதிவுகளை அனுமதி கேட்டு பின்னர் தன் தளத்தில் வெளியிட்ட 4Tamilmedia வுக்கு நன்றி.
******************************************************************************************









ennathai thala sollaa...
பதிலளிநீக்குpollaatha ulakam...
unmaidhaan
நீக்கு’யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்’ என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்குநல்ல பயனுள்ள பகிர்வு.
வங்கி தொடர்பான விவரங்களை கட்டாயம் கணினியில் சேமித்தல் கூடாது
நீக்குஅடி ஆத்தீ.....இப்பிடியும் கிளம்பிட்டாங்களா ? பெண்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
பதிலளிநீக்குநிச்சயமாக. நன்றி மனோ சார்
நீக்குஅவர்கள் வியாபார நோக்கிற்காக மட்டுமே நாம் என்ன சர்ச் செய்கிறோம் எந்த தளங்களுக்கு செல்கிறோம் எதை ஆன்லைனில் வாங்குகிறோம் என்பதை ஆராயுந்து அதற்கு ஏற்றவாறு தம் வியாபார யுத்திகளை மாற்றுகிறார்கள் அவ்வளவுதாங்க இதுக்கெல்லாம் அமெரிக்கர்கள் மாதிரி எங்கள் பிரைவேசி போய்விட்டதே என்று ஆர்ப்பாட்டம் பண்ண வேண்டாம்
பதிலளிநீக்குஎன்ன கூகுல்காரன் நாம யார்கிட்ட சாட் பண்ணுறோம் நாம் வாழ்க்கை துணையை சீட் பண்ணுகிறோமா என்று பார்த்து பெண்களையோ ஆண்களையோ ப்ளாக் மெயில் பண்ணாத வரை நீங்கள் கவலைப்பட வேண்டாம்
வங்கி தகவல்கள் போன்றவற்றை சேமித்து வைப்பது நல்லதல்ல
நீக்குஆம் அய்யா உலகத்தில் எதவுமே இலவசம் இல்லைதான். தொந்தரவுகள் மட்டுமே இலவசம். மிகவும் பயனுள்ள பதிவு அய்யா நன்றி
பதிலளிநீக்குநன்றி ஜெயகுமார் சார்
நீக்குஎதுவுமே இலவசமில்லை என்பது முற்றிலும் உண்மை.
பதிலளிநீக்குநட்ன்ரி ஸ்ரீராம்
நீக்குஉலகத்தில் எதுவும் இலவசமில்லை. சொல்லும் அளவுக்கு பாதுகாப்பும் இல்லை என்பதே உண்மை.
பதிலளிநீக்குதாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நண்பரே.
நன்றி குணசீலன்
நீக்குஉண்மை... எல்லாமே பணம் என்றாகியும் விட்டது... தகவலுக்கு நன்றி...
பதிலளிநீக்குநன்றி தனபாலன்
நீக்குஎதுவும் இலவசமில்லை........
பதிலளிநீக்குகூகிள் சர்ச் செய்து மட்டுமல்ல, ஒரு ஐ.பி. அட்ரஸிலிருந்து என்ன பார்க்கிறார்கள் என்பதை கண்காணித்து அதற்கேற்ற விளம்பரங்கள் தருகிறார்கள்....
சமீபத்தில் தில்லி - திருவனந்தபுரம் செல்ல விமான டிக்கட் பார்த்துக் கொண்டிருந்தேன். தொடர்ந்து சில மணி நேரத்திற்கு பல தளங்கள் திறந்த போது, அதில் எங்கேயாவது Cheap tickets from Delhi to Trivandrum விளம்பரம் வந்தது! :)
இது போல் பல தொந்தரவுகள் உண்டு
நீக்குஉங்களது இந்த பதிவை யாழ் மின்னல் வலைத்தளம் அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி வெளியிட்டு இருக்கிறது ஆனால் உங்களின் பெயரை மட்டும் மறைத்துள்ளார்கள் http://www.yarlminnal.com/?p=48743
பதிலளிநீக்குஅதில் முக்கியமான விஷயம் நான் பகிர்வதற்கு முன்பே ப்கிரப்ட்டிருந்ததுதான். என்ன சுறுசுறுப்பு யாழ் மின்னலுக்கு!
நீக்குஉலகத்தில் எதுவும் இலவசமில்லை. சொல்லும் அளவுக்கு பாதுகாப்பும் இல்லை என்பதே உண்மை.குறிப்பாக பெண்கள் அதிக கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம்.//பெண்கள் மட்டுமல்ல நாமும் சர்வ ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்
பதிலளிநீக்குநன்றி கண்ணதாசன் சார்
நீக்குதகவலுக்கு நன்றி! மடியில் கனமும் இல்லை. வழியில் பயமும் இல்லை.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குயாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்ன்னு பாட்டு தான் பாடனும்
பதிலளிநீக்குயாரை நம்பினாலும் இணையத்தை நம்ப முடியாது
நீக்குநாம இலவசத்தை ஏற்றுக்கொள்ளும்போது அதனால் வரக்கூடிய துன்பத்தையும் தவிர்க்க கவனமாயுமிருக்க வேண்டும்...
பதிலளிநீக்குஉண்மைதான் எழில்
நீக்குநேற்று விஜயன் துரை பேஸ்புக் பற்றி எழுதியிருந்ததைப் படித்துவிட்டு அந்த அக்கவுண்டை மூடி விடலாமா என்று தோன்றியது. இன்று உங்கள் இந்தப் பதிவு கணணியை ஒரேவழியாக விட்டுவிடலாமா என்று எண்ண வைக்கிறது.
பதிலளிநீக்குஅவர்கள் உண்மைகளின் காமென்ட் வயிற்றில் கொஞ்சம் பால் வார்க்கிறது.
தகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!
பெண்கள் தங்கள் புகைப்படங்களை பகிர்வது தவிர்க்கப்படுவது நல்லது
நீக்குஅன்பின் முரளிதரன் - தகவல் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குநண்பரே அவியிங்க...நம்மள பற்றி தகவல் சேகரிக்க நம்மிடம் என்ன ரகசியம் இருக்கு..?
பதிலளிநீக்குஹஹஹாஹா
நீக்குஎப்படியெல்லாம் யோசித்து நம்மை கண்காணிக்கிறார்கள்! யாழ் மின்னல் இப்படி உங்களின் பதிவை காப்பியடித்திருக்க கூடாது! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்
நீக்குநேற்று இரவு பதிவிட்டேன். தமிழ்மணத்தில் இணைக்கவில்லை. காலையில்தான் தமிழ் மணத்தில் இணைத்தேன். தமிழ் 10 இல் இணைக்க முற்பட்டேன். அங்கே இதே பதிவைக் கண்டேன். வேறு யாரோ இணைத்து விட்டார்கள் என்று நினைத்து அதற்கு ஓட்டும் போட்டேன். அப்புறம்தான் தெரிந்தது அது யாழ்மின்னல் என்ற வலைதளத்தில் என் அனுமதியின்றி வெளியிடப் பட்டிருக்கிறது.//
பதிலளிநீக்குஇப்படியெல்லாம் கூட களவு நடக்கிறதா? நான் த.ம. தளத்தைத் தவிர வேறெந்த திரட்டியிலும் இணையவும் இல்லை வாசிப்பதும் இல்லை. இங்கு வெளியாகும் பதிவுகளைப் படிக்கவே நேரம் போதவில்லை.
useful info..................
பதிலளிநீக்குவங்கி கணக்கு உளளிட்ட சில பர்சனல் தகவல்களை மறைத்தே உலா வருதல் நலம எனபது புரிகிறது. முக்கியமாக பெண்கள்தான் கூடுதல் உஷாராக இருக்க வேண்டும். அபாய எச்சரிக்கை தந்த அருமையான பகிர்வு. நன்றி முரளி.
பதிலளிநீக்கு300AA9A44E
பதிலளிநீக்குBeğeni Satın Al
Ucuz Takipçi
Instagram Bot Basma