என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 9 ஜூலை, 2015

பஞ்சப்பாட்டு பாடலாமா?


உங்களுக்கு எஸ்.பி. பாலசுப்ரமணியம் பற்றி தெரியும். மு.பி.பால சுப்பிரமணியம் யார் தெரியுமா?  மு.பி.பால சுப்பிரமணியம் பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றிய தமிழ்ப் பேராசிரியர்.  சிறந்த கவிஞர். குயில் இதழில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் பாராட்டப் பட்டவர் . 
பள்ளி நூலகத்தில் அவரது "கவிதை மேகங்கள்" என்ற கவிதை நூல் கிடைத்தது. இக்கவிதை நூல்முழுதும் மரபுக் கவிதைகளால் நிரம்பியவை . இவரது சில கவிதைகள் சில பாடப் புத்தகங்களிலும் இடம்பெற்றிருந்ததாக நினைவு 
இவரது கவிதைகளின் எளிமையும் இனிமையும் சந்த நயமும் என்னைக் கவர்ந்தது. ஒருமுறை    புத்தகத்தில் உள்ள முகவரியை வைத்து அவருக்கு கவிதையில் ஒரு பாராட்டுக் கடிதம் எழுதினேன். நன்றி தெரிவித்து கடிதம் எழுதியதோடு அவரது நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைப்பு விடுத்தார். அப்துல் ரகுமான்,ஈரோடு தமிழன்பன் ஆகியோர் கலந்து கொண்ட விழாவில் கவிதை பாட எனக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இவரது கவிதைகளில் பல எனக்குப் பிடித்திருந்தாலும்  பஞ்சம் என்ற  தலைப்பில் எழுதிய எண்சீர் விருத்தக் கவிதை எனக்கு பிடித்திருந்தது.

அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

                                        பா ரதத்தில் ஊர்பவரே பஞ்சம் என்றால் 
                                               பைந்தமிழ் நாட்டெல்லையுடன் நின்றிடாதீர்
                                        பாரதத்தின் ஒருமைப்பா டெங்கே  என்று  
                                                 பக்குவமாய் சொல்வேன் பஞ்சத்தில் என்று 
                                        நீரதனை மறுத்தாலும் வெறுப்பே இல்லை 
                                                நீர் இடித்து நீர் விலகிப் போமோ சொல்வீர்!
                                        யார் எதனை சொன்னால்தான் என்ன பஞ்சம் 
                                               இந்தியஒற் றுமைகூறும் நல்ல சாட்சி 

                                        கடைப்பஞ்சம் பதுக்குவதால் தோன்றும் பஞ்சம் 
                                                கருப்பஞ்சம் நம்நாட்டில் இல்லாப் பஞ்சம் 
                                        'கடைப்'பஞ்சம் நாணயத்தை விலைக்கு விற்கும் 
                                                நதிப் பஞ்சம் நாடுகளை நலியச் செயும் 
                                         படைப் பஞ்சம் தோல்விக்கு படி அ மைக்கும்
                                                 பணிப் பஞ்சம் வேதனைக்கு வழி வகுக்கும் 
                                         உடைப் பஞ்சம் எதைக் காட்டும் உடலைக் கட்டும் 
                                                  உருப்படாமல் போவதற்கு வழியைக் காட்டும் 

                                         விடைப் பஞ்சம் மாணவரை விழிக்க வைக்கும் 
                                                  விழிப்பஞ்சம் குருட்டுலகில் தவிக்க செய்யும் 
                                         இடைப் பஞ்சம் அக்கால மகளிர்க்குண்டாம் 
                                                  எழில் பஞ்சம் இக்கால மகளிர் சொத்தாம் 
                                          எடைப் பஞ்சம் சந்தையிலே நமை ஏமாற்றும் 
                                                   இரைப் பஞ்சம் வறுமையிலே தூக்கித் தள்ளும் 
                                           மடைப் பஞ்சம் கபினியிலே என்றால் தஞ்சை 
                                                     மண்பஞ்சத்தால் நலிதல் நீதியாமோ 

                                            முடிப் பஞ்சத்தால் தலையில் வழுக்கை தோன்றும் 
                                                     முழுப் பஞ்சத்தால் நாட்டில் வறுமை  தோன்றும் 
                                             குடிப் பஞ்சத்தால் குடும்பம் செழித்தே ஓங்கும் 
                                                     கொடைப் பஞ்சத்தால் ஏழ்மை கலங்கிப் போகும் 
                                             இடிப் பஞ்சத்தால் வானம் வறண்டு தோன்றும் 
                                                         இதழ்ப் பஞ்சத்தால் மலரும் காம்பாய்ப் போகும் 
                                              பொடிப் பஞ்சத்தால் தவிக்கும் சிலமூக்குக்கள் 
                                                        புகழ்ப்பஞ்சத்தால் தவிக்கும் சில நெஞ்சங்கள்  

                                              மீன் பஞ்சத்தால் கொக்கு கவலை கொள்ளும் 
                                                        மின்சாரப் பஞ்சமெனில் இருட்டே மிஞ்சும் 
                                              வான்பஞ்சம் தாய் என்றால் வாட்டம் சேய்தான்;
                                                          வண்ணங்கள் பஞ்சமெனில் உருவம் பேய்தான் 
                                               ஊன்பஞ்சம் நல்லுடலை நலியச் செய்யும் 
                                                           உண்மைக்குப் பஞ்சமெனில் மகிழும் பொய்யே 
                                                தேன்பஞ்சம் ஆகிவிட்டால் மலரோ வாடும் 
                                                          தினம் பஞ்சம் வந்து விட்டால் வாழ்வே வேகும் 



இன்னமும் சில பஞ்சங்கள் இருக்கின்றன கொஞ்சம் நீளமாக இருப்பதால் பஞ்சப் பாட்டு அடுத்த பதிவிற்குப்பின் தொடர இருக்கிறேன் 

***********************************************************************
முந்தைய பதிவு 





27 கருத்துகள்:

  1. யம்மாடி...! எத்தனை பஞ்சங்கள்...! தொடரும் ? பஞ்சங்களுக்கு பஞ்சமில்லை...

    பக்குவமாய் சொல்லியுள்ளார் பேராசிரியர்...

    பதிலளிநீக்கு
  2. என்னாச்சி... தமிழ்மணம் இணைக்க முடியவில்லை...? பிறகு வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா! நான் இப்போதெல்லாம் உடனே இணைப்பதில்லை சிறிது நேரத்தில் தானாவே இணைக்கப் பட்டு விடுகிறது

      நீக்கு
  3. வணக்கம்,
    இடைப் பஞ்சம் அக்கால மகளிர்க்குண்டாம்
    உண்மை, இப்ப இல்லை என்பதாய்,,,,,,,,,
    அத்துனையும் அருமை,
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு

  4. பஞ்சத்தில் இத்தனை வகையா..? பஞ்சம் என்றால் நமக்கு பசி பட்டினி மட்டும்தான் தெரியும்... எளிமையான மரபுக்கவிதை

    பதிலளிநீக்கு
  5. மு.பி.பால சுப்பிரமணியம் அவர்களது பஞ்ச பாட்டிற்குள் படிப்பவர் அனைவரும் தஞ்சம் புகுவர்.
    பஞ்சத்தை சொல்லி கொஞ்சம் கவி பசியாற்றிய முரளி அய்யா அவர்களுக்கு நன்றி!
    (புகழ்ப்பஞ்சத்தால் தவிக்கும் சில நெஞ்சங்கள் )

    த ம 2
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  6. பஞ்சத்தில் இத்தனையா....
    மரபுக்கவிதை அருமை
    தம 4

    பதிலளிநீக்கு
  7. # மின்சாரப் பஞ்சமெனில் இருட்டே மிஞ்சும் #
    மின்வெட்டை அனுபவித்து எழுதியுள்ளார் :)

    பதிலளிநீக்கு
  8. எண்ணங்களிலும், கற்பனையிலும் திறமையிலும் அவருக்குப் பஞ்சமில்லை எனத்தெரிகிறது. இவரைப்பற்றி இப்போதே அறிகிறேன்.

    பதிலளிநீக்கு
  9. பஞ்சத்தில் இத்தனை வகைகளா
    வியப்பாக இருக்கிறது ஐயா
    பேரா மு.பி.பாலசுப்பிரமணியன் அவர்களை ஒரு முறை
    அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்துள்ளேன் ஐயா
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  10. எத்தனைப் பஞ்சங்கள்!! என்ன ஒரு கற்பனை....பஞ்சமில்லா சிந்தனைகள் நிறைந்த பஞ்சத்தைப் பாடும் கவிதை...அதுவும் மிகவும் யதார்த்தம் சொட்டுவதாக...அருமை அருமை மிகவும் ரசித்தோம்....

    பதிலளிநீக்கு
  11. கடந்த நூற்றாண்டில் தமிழ் நாட்டில் நடந்த பஞ்சங்களைப் பற்றி எழுதுங்களேன்.

    பதிலளிநீக்கு
  12. அருமையான கவிதை....
    பஞ்சம்... இம்புட்டா...

    பதிலளிநீக்கு
  13. வணக்கம்
    முரளி அண்ணா

    ஒவ்வொரு வரிகளும் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம 10

    தங்களுக்கான ஆறுதல் பரிசு அனுப்புவதற்கா தங்களின் மின்னஞ்சல் முகவரியை
    .இதற்கு அனுப்பிவைக்குமாறு தயவாக வேண்டிக்கொள்கிறேன்.

    rupanvni@yahoo.com
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  14. வணக்கம்
    பரிசுஅனுப்புவதற்காக தங்களின் முகவரியை அனுப்பிவைக்குமாறு தயவாக வேண்டிக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. மிக அருமையான ஓர் கவிஞரை அடையாளம் காட்டியதுடன் அவரது சிறப்பான பாடலையும் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி! பஞ்சங்களை அடுக்கி அசத்திவிட்டார் கவிஞர்.

    பதிலளிநீக்கு
  16. பஞ்சம் தமிழின் ஒரு அம்சம் அருமைக்கவி தொடருங்கள் படிக்கும் ஆவலில்!

    பதிலளிநீக்கு

  17. பஞ்சப்பாட்டு பாடலாமா?
    பாடுங்க என்றதும்
    கேளுங்க என்றே
    பஞ்சங்களை நீட்ட
    அதிலும்
    இத்தனை பஞ்சங்களா?

    பதிலளிநீக்கு
  18. பஞ்சத்துக்கு பஞ்சமில்லை! அருமையான பகிர்வுக்கு நன்றி முரளி

    பதிலளிநீக்கு
  19. எங்கே பிடித்தீர்கள் இந்தக் கவிதையை

    பஞ்சமில்லாமல் பாராட்ட வேண்டும் ...
    வாழ்த்துக்கள் அய்யா
    தம +

    பதிலளிநீக்கு
  20. அருமையான கவிதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    த.ம. 12

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895