என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 23 அக்டோபர், 2012

தமிழ்மணத்தில் ஓராண்டு


(அடடா! நம்ம நேரம் பாருங்க இன்னைக்கு தமிழ்மணம் வேலை செய்யல.)
 (அனைவருக்கும் சரஸ்வதி பூஜை ஆய்த பூஜை நல வாழ்த்துகள்)
 
  இப்போதுதான் நடந்தது போல் இருக்கிறது.ஆம் தமிழ்மணத்துடன்   இணைந்து ஓராண்டு இன்றுடன்(23.10.2012) நிறைவடைந்துள்ளது. தமிழ்மணம்  மூலமாக இவ்வளவு பேர் பதிவுகளைப் பார்ப்பார்கள் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. தமிழ்மணம்  தர வரிசையில் நூறுக்குள்  வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அது ஓராண்டுக்குள் நிறைவேறும் என்று எதிர்பார்க்கவில்லை. இன்று எனது தமிழ்மண தரவரிசை 12. உண்மையிலேயே அதற்குத் தகுதி உடையவன்தானா என்ற ஐயம் இருந்தாலும் மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது.. ஓராண்டு பதிவுலக அனுபவங்கள் ஏராளம். முன்னணிப் பதிவர்கள் முதல் புதியவர்கள் வரை பல்வேறு பதிவர்களின் அறிமுகமும் நட்பும் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. பலரை பதிவர் சந்திப்பின் போது பார்த்திருந்தாலும் இன்னும் சிலரது நட்பு மாய நட்பாக(Virtual Friendship) இருப்பினும்  நேய நட்பாகவே தொடர்கிறது.

   பத்திரிகையில் எழுதுபவர்களை விட பதிவுலகில் எழுதுபவர்களுக்கு கஷ்டங்கள் அதிகம். உண்மையில் சரக்கு அதிகம் இருக்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு பதிவுகளாவது எழுதினால்தான் நினைவில் வைத்துக் கொள்ளப் படுவார்கள்.அடுத்த பதிவு என்ன போடலாம் என்று எப்போதும் சிந்தித்துக் கொண்டு எதையும் அழகான பதிவாக்கும் திறன் ஒரு சிலருக்கு கைவந்த கலையாக இருக்கிறது.அது அவர்களை வெற்றிப் பதிவாளர்களாக வலம் வரச்  செய்து கொண்டிருக்கிறது. (நமக்கு அந்த திறமை வரமாட்டேங்குது)

   பிழைப்புக்காக பல்வேறு  தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் சமூகம்  கலை இலக்கியம் அரசியல் இன்னும் பலவற்றைப் பற்றிய நமது எண்ணங்களையும் அனுபவங்களையும் படைப்புகளையும் பகிர்ந்து கொள்வது நமக்கு ஒரு வடிகாலாகவும்  மற்றவர்களுடைய அனுபவங்களும் அறிவும் நமக்கு பயன் தக்கதாக அமைந்திருப்பதும் பதிவுலகின் சிறப்பு. 
   இத்தனைக்கும் மேலாக தமிழ்ப் பதிவுகளை ஊக்குவித்து ஆதரவு அளித்து இணையத் தமிழ் வளர்ச்சிக்கு உதவிடும் தமிழ்மணத்திற்கு நன்றி.தமிழ்மணம் மூலமாக வருகை தந்ததோடு வாக்கும் அளித்து உற்சாகமூட்டிய அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

 முதன்  முதலில் நான் தமிழ்மணத்தில் இணைத்த பதிவை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு சிலர் மட்டும்தான் அதைப் படித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

வெற்றிக்கு  வழி

முன்னேறியவர்கள்
சொன்னதை
முன் மாதிரியாகக் கொள்


நம்பிக்கைச் செடியை
நட்டு வை


உழைப்பு என்ற
நீரை ஊற்று


நாணயம் என்ற
நல்லுரம் இடு


உறுதி என்ற
வேலி போடு


எதிர்ப்பு என்ற
களைகளை
 எச்சரிக்கையுடன்
அகற்று


பொறுமையாய்
காவல் இரு


பின்னர்
வெற்றி
பூவாய்,
காயாய்,
கனியாய்
உன் கையில்!


ஆம்!
எல்லாம் உன்
தன்னம்பிக்கையில் 
************* 39 கருத்துகள்:

 1. தொடருங்கள் சகோ,,, அப்பப்ப நம்மல நாமலே தான் உற்ச்சாகப்படுத்திக்க வேண்டும்,,,

  தொடருங்கள்...

  பதிலளிநீக்கு
 2. மேன்மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

  வரிகள் அருமை...

  (http://tamilmanam.net/) இப்போது செயல்படுகிறது... ஆனால் எந்த தளத்திலும் ஓட்டுப் பட்டை வரவில்லை.... ? ....

  பதிலளிநீக்கு
 3. வலைப் பதிவராக தமிழ் மணத்தில் இணைந்து ஓர் ஆண்டு! தொடரட்டும் உமது இலக்கியத் தொண்டு பல்லாண்டு! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. //மாய நட்பாக(Virtual Friendship) இருப்பினும் நேய நட்பாகவே தொடர்கிறது.// அருமை சார்

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துக்கள்...நீங்க தான் நிறைய எழுதி தமிழ் மணத்தை உடைச்சிட்டீங்க போல...-:)

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துகள்....

  இன்று வேலை செய்யவில்லை!

  காரணம் நீங்க தானா.... :)

  பதிலளிநீக்கு
 7. வாழ்த்துக்கள் சார்.
  மணத்தில் இணைத்த முதல் பதிவு முத்தாய் மிண்ணுகிறது

  பதிலளிநீக்கு
 8. வாழ்த்துக்கள் நண்பரே.
  இலக்கியத் தொண்டு என்றும் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 9. மிகச் சில மணி நேரம் தங்களுடன்
  நேரடித் தொடர்பில் இருந்தது இன்றும் என்னுள்
  பசுமை நினைவுகளாய் உள்ளது
  பதிவுலகு குறித்து பகிர்ந்த விதமும்
  தன்னம்பிக்கை கவிதையும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. நண்பரே உங்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்

  பதிலளிநீக்கு
 11. //தொழிற்களம் குழு said...
  தொடருங்கள் சகோ,,, அப்பப்ப நம்மல நாமலே தான் உற்ச்சாகப்படுத்திக்க வேண்டும்,,,
  தொடருங்கள்...//
  தொழிற் களம் குழுவிற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 12. திண்டுக்கல் தனபாலன் said...
  மேன்மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...
  வரிகள் அருமை...//
  நன்றி தனபாலன் சார்!

  பதிலளிநீக்கு
 13. தி.தமிழ் இளங்கோ said...
  வலைப் பதிவராக தமிழ் மணத்தில் இணைந்து ஓர் ஆண்டு! தொடரட்டும் உமது இலக்கியத் தொண்டு பல்லாண்டு! வாழ்த்துக்கள்!//
  நன்றி தமிழ் இளங்கோ சார்!

  பதிலளிநீக்கு
 14. சீனு said...
  //மாய நட்பாக(Virtual Friendship) இருப்பினும் நேய நட்பாகவே தொடர்கிறது.// அருமை சார்//
  நன்றி சீனு

  பதிலளிநீக்கு
 15. வெங்கட் நாகராஜ் said...
  வாழ்த்துகள்....
  இன்று வேலை செய்யவில்லை!
  காரணம் நீங்க தானா.... :)//
  நம்ம மொக்கை பதிவுகளை தாங்காத தமிழ் மணம்
  ஸ்ட்ரக் ஆகி நின்னுடுச்சி போல இருக்கு.

  பதிலளிநீக்கு
 16. ரெவெரி said...
  வாழ்த்துக்கள்...நீங்க தான் நிறைய எழுதி தமிழ் மணத்தை உடைச்சிட்டீங்க போல...-:)//
  வாரத்துக்கு ரெண்டு மூனுதான் பாஸ் எழுதறேன்.

  பதிலளிநீக்கு
 17. //குட்டன் said...
  வாழ்த்துக்கள் முரளிதரன்//
  வாழ்த்துக்கு நன்றி குட்டன்

  பதிலளிநீக்கு
 18. சிட்டுக்குருவி said...
  வாழ்த்துக்கள் சார்.
  மணத்தில் இணைத்த முதல் பதிவு முத்தாய் மிண்ணுகிறது//
  நன்றி சிட்டுக் குருவி

  பதிலளிநீக்கு
 19. சே. குமார் said...
  வாழ்த்துக்கள் நண்பரே.
  இலக்கியத் தொண்டு என்றும் தொடரட்டும்//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்

  பதிலளிநீக்கு
 20. Ramani said...
  மிகச் சில மணி நேரம் தங்களுடன்
  நேரடித் தொடர்பில் இருந்தது இன்றும் என்னுள்
  பசுமை நினைவுகளாய் உள்ளது
  பதிவுலகு குறித்து பகிர்ந்த விதமும்
  தன்னம்பிக்கை கவிதையும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்//
  நன்றி ரமணி சார்!

  பதிலளிநீக்கு
 21. Avargal Unmaigal said...
  நண்பரே உங்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்//
  மதுரைத் தமிழனுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 22. வாழ்த்துக்கள் திரு முரளிதரன் அவர்களே! இன்னும் பல அரிய பதிவுகளை எழுத விழைகின்றேன்.

  பதிலளிநீக்கு
 23. வாழ்த்துக்கள் தொடர்ந்து பதிவுகளால் அசத்துங்க.

  பதிலளிநீக்கு
 24. வாழ்த்துக்கள் நண்பரே!
  கடந்த காலங்களில் அதிக உழைப்பை கொடுத்ததினால் தான் உங்களுக்கு இந்த இடம் கிடைத்தது ,இன்னும் முன்னேறி பற்பல அறிய படைபுகளை கொடுத்து மேலும் உயர வாழ்த்துகிறேன்

  பதிலளிநீக்கு
 25. You are a writer who has a blog.

  Remember that you are not writing for tamilmanam. Tamilmanam is just another website that aggregates your blog.

  Lot of bloggers think that they write for tamilmanam. Ya, kudos to tamilmanam for their service, but tamilmanam is not synonymous to tamil blog.

  Happy blogging.

  பதிலளிநீக்கு
 26. //வே.நடனசபாபதி said...
  வாழ்த்துக்கள் திரு முரளிதரன் அவர்களே! இன்னும் பல அரிய பதிவுகளை எழுத விழைகின்றேன்.//
  நன்றி நடன சபாபதி சார்! நன்றி!

  பதிலளிநீக்கு
 27. //Sasi Kala said...
  வாழ்த்துக்கள் தொடர்ந்து பதிவுகளால் அசத்துங்க//
  நன்றி சசிகலா!.

  பதிலளிநீக்கு
 28. //கவியாழி கண்ணதாசன் said...
  வாழ்த்துக்கள் நண்பரே!
  கடந்த காலங்களில் அதிக உழைப்பை கொடுத்ததினால் தான் உங்களுக்கு இந்த இடம் கிடைத்தது ,இன்னும் முன்னேறி பற்பல அறிய படைபுகளை கொடுத்து மேலும் உயர வாழ்த்துகிறேன்//

  பதிலளிநீக்கு
 29. ஒரே ஆண்டில், தரவரிசை 12 ஐத் தொட்டது அரிய சாதனை.
  உங்கள் தன்னம்பிக்கையும் உழைப்பும்தான் இதற்குக் காரணம்.

  சாதனை தொடருட்டும்.

  பதிலளிநீக்கு
 30. //anonymous said...
  You are a writer who has a blog.
  Remember that you are not writing for tamilmanam. Tamilmanam is just another website that aggregates your blog.
  Lot of bloggers think that they write for tamilmanam. Ya, kudos to tamilmanam for their service, but tamilmanam is not synonymous to tamil blog.//
  உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே! மற்ற திரட்டிகளையும் நான் மதிக்கிறேன். தமிழ் 10,இன்டலி போன்ற திரட்டிகளும் நான் விரும்பும் திரட்டிகள்தான். நேற்றைய நாள் தமிழ் மனத்தோடு தொடர்பு உடையதால் அதற்காகப் பதிவிட்டேன். சமயம் வரும்போது மற்ற திரட்டிகளுக்கும் நன்றி கூறுவேன். எனது 100 வது பதிவின்போது அனைத்து திரட்டிகளுக்கும் நன்றி கூறி இருக்கிறேன்.ஒரு திரட்டியில் இருந்து ஒரே ஒருவர் பார்த்தால் கூட அந்த திரட்டியையும் நான் சமமாக மதிக்கவே செய்வேன்.தமிழ் 10 இல் இந்தப் பதிவை இணைத்தேன். ஆனால் இந்தப் பதிவு தற்போது எந்தப் பிரிவிலும் காணப்படவில்லை.தமிழ்மணம் பற்றி எழுதியதால் நீக்கப் பட்டதா என்று தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால் தமிழ் மணத்திலும் இந்தப் பதிவு காணப்படவில்லை

  பதிலளிநீக்கு
 31. ஆண்டு நிறைவுக்கு
  இனிய நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 32. வாழ்த்துகள் முரளி.

  த.ம. தமிழ்த் திரட்டிகளில் முன்னணியில் இருந்து வருகிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. நடுவில் .in/.com தொந்தரவினால் த.ம. பட்டை இல்லாமல் பல பதிவிகள் குறைந்த வருகையுடன் இருந்ததைப் பார்த்துள்ளேன். உங்களைப் போன்ற முன்னணிப் பதிவர்களின் பதிவை அனைவரும் படித்து விடுவர். புதிதாக எழுதுபவர்கள் அல்லது சுமாராக எழுதும் என்னைப் போன்றவர்களின் பதிவுகளை த.ம. பல வாசகர்களிடம் சேர்க்கிறது.

  மேலும் த.ம.-வில் பதிவை இணைப்பது மிகவும் சுலபமாக இருக்கிறது. (இண்ட்லி, யுடான்ஸ் போன்றவற்றிலும் சுலபம் தான்; இதில் திரட்டி.காம் தானாகவே பதிவை ஏற்கிறது) ஆனால் சில திரட்டிகள் பதிவை பதிக்க 3-5 ஓட்டுகள் போடச் சொல்கின்றன. சிலவற்றில் (உதா. உலவு போன்றவை) பதிவை இணைப்பதிலும் சற்று கடினமாக இருக்கின்றன. [ஏதோ தொ.நு. கோலாறு அல்லது அந்த தொ.நு. எனக்கு புரியாத காரணம்]

  முதலில் உங்களை அதிக வாசகர்களிடம் சேர்த்த த.ம. க்கு நன்றி கூறிய உங்கள் நன்றி உணர்ச்சிக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 33. சார்,
  அருமையாக உங்க அனுபவத்தை சொல்லி இருக்கீங்க...தமிழ்மணம் அளவிருக்கு எந்த திரட்டியும் எனக்கு ப்ளாக் ரீடர்ஸ் குடுத்து இல்லை.... :)
  நானும் பதிவு எழுத ஆரம்பித்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது..

  பதிலளிநீக்கு
 34. kovaikkavi said...
  ஆண்டு நிறைவுக்கு
  இனிய நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.//
  நன்றி வேதா மேடம்

  பதிலளிநீக்கு
 35. //வேங்கட ஸ்ரீநிவாசன் said...
  வாழ்த்துகள் முரளி.//
  நான் முன்னணிப் பதிவர் என்று முதல் முறையாக கூறி இருக்கிறீர்கள்.உங்கள் அன்பிற்கு நன்றி.ஆனால் அதற்கான தகுதிகள் இன்னும் வளர்த்துக் கொள்ள வேண்டி உள்ளது.உங்களது பதிவுகளை நான் விரும்பிப் படிக்கிறேன்.நீங்கள் நிச்சயம் என்னையும் தாண்டிச் செல்வீர்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895