என்னை கவனிப்பவர்கள்

சனி, 27 அக்டோபர், 2012

ஏ.ஆர்.ரகுமானும் சூப்பர் சிங்கர் ஃபைனல்சும்.

    ஒரு வழியாக சூப்பர் சிங்கர் பைனல்ஸ் முடிந்துவிட்டது.பைனலின் சிறப்பு அம்சம் எங்கும் அதிகம் தலையைக் காண்பிக்காத இசைப் புயல் ஏ.ஆர். ரகுமானின் வருகைதான். அவர் அரங்கில் நுழைந்ததும் அரங்கமே ஆர்ப்பரித்தது. கடவுளைக் கண்ட பக்தர்களைப் போல அனைவரும் எழுந்து நின்றனர். பிரபல பாடகர்கள் மனோ,சித்ரா,உன்னிகிருஷ்ணன், உட்பட அனைவருமே  ஒரு பரவச நிலையில் காணப்பட்டது போல் என் கண்களுக்கு தெரிந்தது. அவரோ அமைதியாக பாதிப் புன்னகையுடன் காட்சி அளித்தார். சாந்தமான முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் இவருள்தான் இசைபுயல் அடித்துக் கொண்டே இருப்பது ஆச்சர்யம்தான். இந்திய இளைஞர்களையும் சிறுவர்களையும் தனது இசைக்கு அடிமையாக்கி வைத்திருக்கும் அவர் முகத்தில்தான் எத்தனை அமைதி!

   அவரது இசையில் ஒரு பாடல் பாடினால்கூட  போதும் என்று பிரபலப் பாடகர்களே தவம் கிடக்கும்  இந்த சூழ் நிலையில் அவர்  முன்னிலையில் பாடக் கிடைத்த வாய்ப்பை ஐந்து பைனலிஸ்ட்களில் ஒருவர் கூட சரியாகப் பயன்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன்.ஒலி அமைப்பு சரியில்லையா அல்லது பாடியது  சரி இல்லையா. என்று தெரியவில்லை.அவர்கள் பாடிய பாட்டு நம்மையே ஈர்க்கவில்லை.ரகுமானை ஈர்த்திருக்குமா என்பது சந்தேகம்தான்.அவர்கள் பாடிய போது ரகுமானின் சிந்தனை வேறு எங்கோ இருந்தது போல்தான் காணப்பட்டது. முடிந்ததும் ஏதோ ஒப்புக்கு கை தட்டியதுபோல் தோன்றியது. கருத்து கேட்டபோது  One Word Answer போல சொன்னார். அவர் என்ன சொன்னார் என்பதும் சரியாகப் புரியவில்லை.சுகன்யாவுக்கு மட்டும் மேலும் இரண்டொரு வார்த்தை சேர்த்து சொன்னார்.

  ஃபைனல் என்று சொன்னாலும் அன்று பாடுவதை வைத்து முடிவுகள் அமையப் போவதில்லை என்ற சூழ்நிலையில் வெறும் முடிவுகளை அறிவிக்கும் விழாவாக மட்டும் வைத்திருக்கலாம்.நம்முடைய பொறுமையும் சோதிக்கப்படாமல் இருந்திருக்கும்.

  லைவ் என்று சொன்னாலும் முடிந்த நிகழ்ச்சி ஒலி பரப்பப் பட்டதாக கேபிள் சங்கர் ட்விட்டரில் கூறி இருக்கிறார். இதோ அந்த ட்வீட் 


(கவனிச்சீங்களா? கேபிள்சங்கர் தன்பேர் கூட  அய்யர் ன்னு சேத்து வச்சிருக்கிறார்! கிண்டலா!சீரியசா! )
 

  நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டு நள்ளிரவைத்தாண்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.முதலில் ஐந்தில் கடைசி இரண்டு இடம் பெற்ற பெயரை அறிவித்தபோது அந்த இருவரில் சுகன்யாவும் இருந்தது மேடையில் இருந்தவர்களுக்கே லேசான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யாழினியின் முகத்தில்கூட அந்த அதிர்ச்சி வெளிப்பட்டது.கீழே இருக்கிற புகைப்படத்தில் பாருங்கள் யாழினி அதிர்ச்சி அடைவது சுகன்யாவுக்காக.போட்டியில் உள்ள அந்தக் சிறுமியால் கூட சுகன்யாவின் வெளியேற்றம் நம்பமுடியவில்லை.  

              (யாழினியின் அதிர்ச்சி சுகன்யா,கெளதமுக்காக)

  மூன்றாது இடம் யாழினிக்கு, இரண்டாவது இடம் பிரகதிக்கு  எதிர்பார்த்த மாதிரியே எதிர்பாரா முடிவாக ஆஜித் வெற்றி பெற்றார்.(வெற்றி பெற வைக்கப் பட்டாரோ?) சுகன்யா பிரகதி இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

எது எப்படியோ வெற்றி பெற்ற ஆஜித்துக்கு வாழ்த்துக்கள்.

                  (சிரிக்கிறது ரகுமான்தான் நம்புங்க!)

  ஒரு  வழியாக சூப்பர் சிங்கர் ஜூனியர் முடிவு பெற்றது. அடுத்து சூப்பர் சிங்கர் சீனியர் 4 வேறு வரப்போகிறதாம்.கொஞ்சமாவது இடைவெளி இருந்தால்தான் நிகழ்ச்சி வெற்றி பெறும். இல்லையேல் சலிப்பைத் தான் ஏற்படுத்தும் என்பது எனது கருத்து.

**************************************************************************************




16 கருத்துகள்:

  1. தகவலுக்கு நன்றி.
    அஜித்துக்கு பாராட்டுக்கள்.....

    பதிலளிநீக்கு
  2. நீங்களும் முழுக்க பார்த்தீங்களா சார்? இந்த படமெல்லாம் எப்படி எடுத்தீங்க? நான் தேடிய போது இவை ஏதும் கிடைக்கலை

    பதிலளிநீக்கு
  3. உண்மைதான் அஜீத்துக்கு நடுவர்கள் எல்லாம் பயங்கர சப்போர்ட்... நல்லா பாடிய பெண்களுக்கு வாய்ப்பில்லை...

    முடிவு முன்னரே எடுக்கப்பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
  4. Though I voted for three people including Ajeedh but never expected title will be given to him. they could have given him special prize not the title winner. It looks planned before

    பதிலளிநீக்கு
  5. உங்கள் பதிவு மூலம் அனைத்தும் அறிந்தோம்.
    நன்றி முரளி. நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  6. தகவல்களுக்கு நன்றி. நான் பார்க்கவில்லை! வெற்றி பெற்றது யார் என்பதையே மோகனின் வீடுதிரும்பல் வலைப்பூவில் தான் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  7. அது என்னமோ இதுப்போன்ற குழந்தைகள் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் பிடிப்பதில்லை. குழந்தைகளை ரொம்ப கஷ்டபடுத்துறதா நினைப்போ இல்லை தங்களுக்கே தெரியாம வயதுக்கு மீறிய ஆபாச பாடல்வரிகளை பாடுவதனாலோ என்னமோ தெரியலை. அதனால நிகழ்ச்சிகளை பார்க்குறதில்லை.

    பதிலளிநீக்கு
  8. ரகுமான் வந்தபிறகு அவர்கள் பாடியது அவரை ஈர்த்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் அவர் ஏற்கெனவே அவர்களின் பங்களிப்பைப் பார்த்து/கேட்டிருக்கலாம். அந்த வகையில் அவர்களின் திறமை அவருக்குப் புரிபடலாம். ஆஜித்தின் வெற்றி அரசியலாக்கப் பட்டுள்ளது எல்லா இடங்களிலும் படிக்கும்போது தெரிகிறது. சொல்லப்படும் இரண்டுபக்கக் கருத்துக்களுமே சரி என்றும் படுகிறது!

    பதிலளிநீக்கு
  9. நாங்கள் சுகன்யாவிற்கு வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். உண்மையான திறமைகளுக்கு வெற்றி கிடைக்காத பட்சம் எதற்கு இந்த போட்டிகள்? ஆஜித்தின் வெற்றி விலைக்கு வாங்க பட்டது போல் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. இது அங்கீகரிக்கப் பட்ட போட்டி அல்ல..
    WWF & IPL போல Just a Show...
    சிறுவர்கள் பாடுவதை ரசியுங்கள், அல்லது புறக்கணியுங்கள்..
    விமர்சிப்பது இந்த கேடுகெட்ட நிகழ்ச்சிக்கு இலவச விளம்பரம் தருவதுபோல் ஆகும்...

    பதிலளிநீக்கு
  11. Sukanya is the supersinger. AAJITH -???????????

    பதிலளிநீக்கு
  12. ஆஜித் பாடியது குறிப்பாக ‘ சிறு பூக்கள்’ பாடல் நன்றாகவே இருந்தது. இறுதிப் போட்டியை மட்டும் வைத்துப் பார்த்தால் அதில் ஆஜித் பாடியது தான் மற்றவர்களை விடச் சிறப்பாக இருந்தது. ஆனால் போட்டி முடிவுகளோ யார் நன்றாகப் பாடினார்கள் என்பது இல்லை. யாருக்கு அதிக வாக்குகள் கிட்டியது என்பது தான். எனவே, அதிக வாக்குகள் கிட்டிய பாடகர் என்ற அளவில் ஏற்க வேண்டியது தான்!

    btw, விஜய் தொ.கா. இந்த நிகழ்ச்சியை வைத்து இன்னும் ஒரு மாதம் இழுப்பார்கள். நேற்றே இதன் மறு ஒளிபரப்பு (ஆ)ரம்பம் ஆகிவிட்டது!

    பதிலளிநீக்கு
  13. நல்ல நிகழ்வு.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. நல்ல தொகுப்பு ...கருத்து விறுவிறுப்பு ..அருமை

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895