கைவிடப்பட்டவன்
என்னை ஏன்
கைவிட்டீர்?
நான் முதியவன்
என்பதாலா?
கம்பீரமாய்
உலகை வலம் வந்தவன்
நான்
இன்று
சேற்றில் கால்புதைந்த
யானையாய்
சிக்கிக் கொண்டிருக்கிறேன்.
நீலம் புயல்
என்னை
நிலைகுலைய வைத்தது!
அதைவிட
உங்கள் அலட்சியம்
என்னை அவமானப் படுத்தியது
உங்கள்
உயர்வுக்காக அல்லவா
தள்ளாடித் தள்ளாடி
அலைந்தேன்!
பாரங்களை சுமந்தேன்!
என்னை
கரைசேர்க்க வேண்டிய
என் எஜமானன்
கண்டுகொள்ளாமல் போனான்
நான் தவிப்பது தெரிந்தும்!
அனாதையாய் நான் நீர்க் காட்டில்!
உணவின்றி நீரின்றி
உழன்று கொண்டிருந்தபோது
நீங்கள் உறங்கிக் கொண்டிருந்தீர்கள்!
எனது ஆயுள் முடிந்துவிட்டதாம்!
காலம் கடந்தபின்
என்னைக்
காப்பாற்றப் போகிறார்களாம்
அறுவை சிகிச்சைக்கு
ஆட்களை அழைத்திருக்கிறார்கள்!
பிழைப்பேனா?
பிரிவேனா?
எதுவாயினும் பரவாயில்லை
வாழ்க்கை முடிவதற்காக
நான் வருந்தப் போவதில்லை
அதுவரை,
என்னைக்காட்சிப் பொருளாக்கி
காண வந்தோரே!
உங்களையாவது
உற்சாகப் படுத்துகிறேன்.
இப்போது கேட்கிறேன்
சொல்லுங்கள்!
நான் யார் தெரிகிறதா?
இன்னுமா தெரியவில்லை?
பிரதீபா காவேரி!
கைவிடப் பட்ட கப்பல் நான்!
காவேரி என்றாலே
கைவிடத் தான் தோன்றுமோ?
********************************************************************************************
இதைப் படிச்சாச்சா?
புஷ்பா மாமியின் எச்சரிக்கை
இதை எழுதியது யாரு?கண்டுபிடியுங்க!
கவிதையின் தலைப்பு அழைப்பு! இதை எழுதியவர் வைரமுத்து அதை சரியா கண்டு பிடிச்சு உறுதியா சொன்னவங்க மோகன் குமார், அரசன்,ரெவரி, உஷாஅன்பரசு, பனிமலர், இவர்களுக்கெல்லாம் சொன்னபடி இட ஒதுக்கீடு பண்ணிட்டேன். சிலர் வைரமுத்துன்னு கணிச்சிருந்தாங்க. அவங்களுக்கும் வாழ்த்துக்கள். படித்த, கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
***************************************************************************************
***************************************************************************************
சார் கடைசியில் கவிஞர் பேரை பாருங்க; தவறா இருக்கு மாத்திடுங்க
பதிலளிநீக்குமாத்திட்டேன் நன்றி.
நீக்குநல்ல வரிகள்...
பதிலளிநீக்குநன்றி...
நன்றி DD சார்
நீக்குவைர முத்துன்னு விடைய சரியா மாத்துங்க முரளி. கைவிடப்பட்ட கப்பலின் குரலாய் ஒலித்த கவிதை மிக அருமை. உங்களுக்கும் உங்கள் குடும்பதினருக்கும் என் இதயம் நிறைந்த தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி கணேஷ் சார்! மாத்திட்டேன்.
நீக்குநல்ல கவிதை! இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்ற ஸ்ரீநிவாசன். உங்களுக்கும் எனது தீபாளி வாழ்த்துக்கள்.
நீக்குகாலை ஏழு மணிக்கே சென்று பார்த்தேன் வீடு திரும்பியது அந்த கப்பல்....
பதிலளிநீக்குதீபத்திருநாளில் எல்லா வளமும் செல்வமும் பெற்று பல்லாண்டு வாழ்க
என இத்திருநாளில் வாழ்த்துகிறேன்
உண்மைதான் சார். பதிவிடும்போது அந்த செய்தி தெரியாது.
நீக்குகடைசி வரிகள் காவேரி என்றால் கைவிடத்தான் தோன்றுமா? நச்! அருமை! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்.
நீக்குநல்லது நண்பரே...
பதிலளிநீக்குவெற்றிகரமாக கடலுக்குள் திருப்பியிருப்பது மகிழ்ச்சி
நன்றி சௌந்தர்.
நீக்குமனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..
பதிலளிநீக்குநன்றியும் வாழ்த்தும் ராஜேஸ்வரி
நீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றி ரேவரி சார்!
நீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
பதிலளிநீக்குஉங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்
அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
நீக்குநன்றி சௌந்தர்.
பதிலளிநீக்குஇனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்...
பதிலளிநீக்குஅருமையான கவிதை நண்பரே...
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
என் மனம் கனிந்த இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்..
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_13.html) சென்று பார்க்கவும்... நன்றி...
நன்றி சார்!
நீக்குஅருமையான கவிதை.
பதிலளிநீக்குஇனிய வாழ்த்துகள்.
இன்பம் பொங்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஉங்களுக்கும் உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் இந்நாள்
என்றும் இனிக்கும் இனிய பொன்னாளாக அமையட்டும் !.......
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ!.
பதிலளிநீக்குகாவேரி என்றாலே கைவிடத் தான் தோன்றுமோ?
பதிலளிநீக்கு>>
செம நச்
:)
பதிலளிநீக்குநல்ல கவிதை!
#அலட்சியம் என்னை அவமானப்படுத்தியது# வயோதிகத்தை மதிக்காமல் இருந்தாலும் மிதிக்காமல் இருந்தால் போதும்.
பதிலளிநீக்குகாவிரி என்றால் இப்படித்தான்.... என்னவோ இப்படியே பேசத்தான் முடிகிறது நம்மால்... நீங்கள் கவிதையாக்கிவிட்டீர்கள்
கப்பலின் குரல் யதார்த்தக் கவிதை நன்று.
பதிலளிநீக்குஇரசித்தேன்.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.